உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

115

ஜீவ:

குடி:

ஜீவ:

அன்புங் குடிமைப் பிறப்பும் அரசவாம்

பண்பும் அறிவும் பரவுநூ லுணர்வும்

தூய்மையும் மன்னவை யஞ்சாத் திண்மையும் 175 வாய்மையுஞ் சொல்லில் வழுவா வன்மையுந் துணிவுங் காலமுங் களமுந் துணியுங் குணமும் மந்திரத் தலைவர் துணைமையும் உடையனே வினையாள் தூதனென் றோதினர். அன்ன தூதரை யனுப்பின் மன்னவ!

180 உன்ன தெண்ண முறுமே யுறுதி;

அன்றெனி லன்றே! அதனால்

வென்றிவை வேலாய் விடுவாய் தெரிந்தே.

அத்திறம் முற்றும் ஒத்தவ னாய்நமக் குரிமை பூண்டநின் அருமை மகன்பல 185 தேவனே யுள்ளான், மேவலர் பலர்பால் முன்னம் பன்முறை தூதிலும் முயன்றுளான், அன்னவன் றன்னை அமைச்ச! ஏவிடத் தயையா யிசைவாய் நீயே.

ஐய மதற்கென்? ஐய! என்னுடல்

190 ஆவியும் பொருளும் மேவிய சுற்றமும் நினதே யன்றோ! உனதே வலுக்கியான் இசையா தொழிவனோ! வசையறு புதல்வன் பாலியன் மிகவும்; காரியம் பெரிது

பெரிதென்? அங்கவன் பேசவேண் டியவெலாம் 195 விரிவா யெடுத்துநீ விளம்பி விடுக்கில், நலமா யுரைப்பன் நம்பல தேவன்.

வருத்தம் இவையெலாங் கருத்தி லுணராது உரைத்தனர் முனிவர். உதிய னவைக்கே யோசனை யின்றி நடேசனை யேவில்

200 நன்றாய் முடிப்பனிம் மன்றல்

என்றார். அவர்கருத் திருந்த வாறே!

10

11

12

அரசவாம் அரசு + அவாம். அவாம் – அவாவும், விரும்பும், மேவலர் - பகைவர். ஏவிட - அனுப்ப. பாலியன் - இளைஞன். உதியன் - சேரன்.