உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

உள்ளப் பரப்பி லொருபுறத் தன்றி,

பள்ளத் தாழ்ச்சியிற் பரிவும், கொள்கை

விள்ளா முரணும், மெய்ம்மையில் தெளிவும், உள்ளார்; அவர்தம் உறுதிநீ யுணராய்.

130 சுற்றிச் சுழலினுங் கறங்கொரு நிலையைப் பற்றியே சுழலும்; அப் படியலர் புருடர். கேடவ ருறுவதிங் காடவ ருருவுகொண் டலை தருங் கொடியஇவ் வலகைகள் வழியே. புருடரோ இவரும்! கருவுறுங் குழவிமெய் 135 மென்றிட நன்றெனக் கொன்றுதின் றிடுவர். அவாவிற் களவிலை, அன்போ அறியார். மணமும் அவர்க்கொரு வாணிகம்! அந்தோ! சீ! சீ! என்இத் தீயவர் செய்கை!

மாசிலா வையகத் திவ்வுயிர் வாழ்க்கை 140 ஆம்பெருங் கடலுள் போம்மரக் கலனாம் ஆடவர் நெஞ்சம், அறத்துறை யகன்று நீள்திசை சுழற்று நிலையிலாக் காற்றாம் நிண்ணய மற்ற எண்ணம் இயக்கச்

சென்றுழிச் சென்று நன்றறி வின்றி

145 அலையா வண்ணம், அறத்துறைக் குடாவில் நிலைபெற நிறுத்துநங் கூரமாய் பின்னுஞ்

செய்வினை முயற்சியிற் பொய்வகைப் புன்னெறிக் கெற்றுண் டகன்று பற்றொன் றின்றி

ஆசையாம் திசைதொறும் அலைந்து திரிந்து 150 கெடாவணங் கடாவிக் கெழுமிய அன்புசேர் அறப்பிடி கடைப்பிடி யாகக் காட்டிச்

129

விள்ளா - விடாத, விண்டுபோகாத. கறங்கு – சுழல்வது, காற்றாடி. மரக்கலம் - படகு. நீள்திசை பரந்த திசைகள். நிண்ணயம் – நிர்ணயம். இயக்க - செலுத்த. குடா - குடாக் கடல், குடாக்கடல்களில் கப்பல்கள் தங்குவது மரபு. நங்கூரம் - கப்பல்களை நிலையாக நிறுத்துவதற்காக நீருக்கடியில் பாய்ச்சப்படும் கருவி. எற்றுண்டு மோதப்பட்டு. கடாவி - செலுத்தி.