உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

145

தூது சென்றவனுக்குச் சேரன் என்ன தீங்கு செய்வானோ என்று என் மனம் பதறுகிறது. அப்பொழுதே சொல்ல எண்ணினேன். அரசர் பெருமானின் கட்டளைக்கு எதிர் பேசக்கூடாது என்று சும்மா இருந்தேன்” என்று கூறினான் குடிலன். அரசன், “பதறாதீர், குடிலரே ! நமது தூதுவனுக்கு அவன் இழிவு செய்யத் துணிந்தால், அப்போதல்லவா பார்க்கப் போகிறீர்? அவனுடைய செருக்கும், வலிமையும், செல்வமும் எல்லாம் என்னவாகும்? கொஞ்சத்தில் விடுவேனோ? குடிலரே! தூது சென்ற உமது மகனுக்கு அவன் தினைத்துணைத் தீங்கு செய்தால், நமது குமாரிக்குப் பனைத்துணை தீங்கு செய்ததாகக் கருதிப் பழி வாங்குவேன்" என்று கூறினான்.

இந்தச் சமயத்தில் ஒற்றன் ஒருத்தன் வந்து வணங்கி, திருமுகம் ஒன்றை அரசனிடம் கொடுத்துச் சென்றான். ஒற்றனுடைய முகத் தோற்றத்தைக் கண்ட அமைச்சன், தனக்குள்ளே, நாம் கருதிய காரியம் முழுவதும் முடிந்தது. போர்மூண்டது. அரசனுக்கு இறுதியும், நமக்கு உறுதியும் வாய்க்கும் என்று சொல்லிக் கொண்டான்.

"

திருமுகத்தைப் படித்துப் பார்த்த அரசன், சினங்கொண்டு தனக்குள் கூறிக் கொண்டான்: துட்டன். நமது தூதனை ஏசினான். திருமணத்தை இகழ்ந்து பேசினான். அவன் அடியை வணங்கினால் விடுவானாம்! போர் செய்ய வருவானாம். முடி பறித்திடுவானாம். துஷ்டப்பயல் என்று கடிந்து பேசி, அமைச்சனைப் பார்த்து, “குடிலரே! நீர் கூறியபடியே ஆயிற்று. இக் கடிதத்தைப் படித்துப் பாரும்” என்று சொல்லித் திருமுகத்தைக் கொடுத்தான். குடிலன் அதனைப் படித்துப் பார்த்து, “என்ன சொல்வது! உண்ண வா என்றால், குத்தவா என்கிறான். அவன் போருக்கு வந்ததைப்பற்றி அஞ்சவில்லை. குமாரியைக் கூறிய குற்றமும் இழிவும் கருதியே என் மனம் அழிகின்றது” என்று கூறினான். அரசன், “பொறு, பொறு, குடிலரே! நம்மைக் குற்றம் கூறிய அவன் குலத்தை வேரோடும் அழித்து விடுகிறேன், பாரும்" என்று சினந்து கூறினான்.

66

அரசர்பெருமான் போர்க்களஞ் சென்றால் அச் சிறுவன் பிழைப் பனோ? ஏதோ மயக்கங் கொண்டு போருக்கு வருகிறான். நாம் வெற்றிபெறுவது உறுதி. ஆனாலும், மதுரையிலிருந்து சேனையை அழைப்பது நல்லது. காலந்தான் போதாது" என்றான் அமைச்சன்.

66

‘மதுரைச் சேனையின் உதவி நமக்குத் தேவையில்லை. ஒரே நாள் போரில் அவன் அஞ்சி ஓடிப்போவான். புலிவேட்டைக்கு இசை