உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20

ஆகவே ‘சட்டி சுட்டது கைவிட்டது' என்பது போல இவ்வுலகத் துன்பங்களை மறப்பதற்கன்றோ துறவு பூண்பது? உலகத்தை மறந்தால் உள்ளமும் மறையும். மனம் மறைந்தால் உள்முகமான மெய்ஞ்ஞானம் தோன்றும். அந்தஇடத்தில் 'நான்' என்பதும் உலகம் என்பதும் இல்லை. எல்லையற்ற அறிவாய் அழியாத பேரின்பமே கிட்டும். இவ்வாறு நான் உலக இயல்பைக் கடந்துநிற்கும் நிலையைக் கூறுவது, 'குருடனுக்குப் பாலின் நிறம் கொக்கு' என்று கூறிய கதை போலாகும். நீரே உமக்குள் பொறுமையாக இருந்து தெளிய வேண்டும்.

இவ்வாறு வேதாந்தக் கருத்தை நிஷ்டாபரர் கூறியதைக் கேட்டுக் கருணாகரர் கூறுகிறார்: “எனக்கு இகமும் வேண்டாம் பரமும் வேண்டாம், சுவாமி! என்னால் ஆன சிறு தொண்டு செய்ய விரும்பு கிறேன். உலகம் பொய் என்றீர். அதனை நமக்கு முதன்முதல் உணர்த்தி யவர் நம் குருநாதர் அன்றோ? அவர் அதனை உணர்த்துவதற்கு முன்பு எப்படியிருந்தோம்? உலக இயல்பில் கட்டுண்டு பொய்யிலும் வழுவிலும் சிக்குண்டு அல்லற்பட்டிருந்தபோது, கருணாநிதியாகிய சுந்தரத்தேசிகர் 'அடகெடுவாய்! இதுவல்ல நன்னெறி' என்று கூறி நல்வழி காட்டாமற் போனால் நமக்கு என்ன தெரியும்? மனம் என்னும் அளவில்லாத பெருவெளிக்குப் பூட்டு ஏது, தாழ் ஏது? பஞ்சேந்திரயம் ஐந்துமட்டுந்தானா மனத்தைக் கெடுப்பது? ஆயிரம் ஆயிரம் வழிகளில் புகுந்து அரைநொடியில் மனத்தை நரகமாக மாற்றிவிடும் தீய நினைவு கள். குருநாதன் அருளுடன் காட்டிய வழியினாலல்லவா உய்ந்தோம்? அவர் திருவருள் இல்லையானால் நமது அஞ்ஞானம் நமக்கு எப்படித் தெரியும்?

66

அண்டங்கள் எல்லாம் ஒன்றோடொன்று மோதாமல் காப்பது கடவுளின் கருணையல்லவா ? நீர் கூறிய சிலந்தியைப் பாரும். தன் சிறிய வலையில் வந்து சிக்கிய ஈயைத் தன் குஞ்சுகளுக்கு உண்ணக் கொடுத்து அன்பு காட்டுகிறது. அது அன்பென்னும் நூலைப் படிக்கத் தொடங்கும் அரிவரி பாடம் அல்லவா? உலகில் காணப்படுகிற துயரங்களைக் கண்டு இரங்கினால் அது மனமாசு நீக்கிப் பொன்னாகச் செய்யும் நெருப்புப் போலாகும். பவழமல்லி முதலிய வெண்மையான பூக்கள் எல்லாம் இருளில் பூச்சிகள் மலர் இருப்பதை அறிந்து கொள்வதற்கே வெண்மை நிறமாகப் பூக்கின்றன என்று நேற்று இரவு நடராஜர் சொல்லுவதற்கு முன்பு நாம் நினைத்தோம் இல்லை. ஈக்களைக் கவர்வதற்கு இருளில் வெண்ணிறம் அன்றே பொருந்தும்? ஈக்கள்