உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20

"வெளியில் எங்கே இருக்கிறார் ?"

66

‘அறியேன்

நாராணர் கூறினார்."

66

முனிவருடைய ஆசிரமத்தில் இருப்பதாக

‘ஏன் ? என்ன நடந்தது ? நிகழ்ந்ததைக் கூறு.

வாணி சொன்னாள் : “ஒருநாள் அவரும் நானும் நகருக்கப்பால் ஒரு வாய்க்காலண்டை போனோம். அங்கே கூழாங்கற்களிடையே சலசலவென்று பாய்ந்தோடும் நீரையும் அந்நீரில் வெண்ணிலாவின் பால்போன்ற ஒளியையும் பார்த்துக் கொண்டு நெடுநேரம் இருந்தோம். அப்போது அவர் அங்கு மலர்ந்திருத்த குவளைப்பூ ஒன்றைப் பறித்து என்னிடம் அன்பாகக் கொடுத்தார். அதனை வாங்கி, அறிவிலியாகிய நான், கண்ணில் ஒற்றினேன் இல்லை; முகர்ந்து மணம் கண்டேன் இல்லை; தலையில் சூடினேன் இல்லை. ஓடும் நீரில் அதைவிட்டு வேடிக்கை பார்த்துச் சிரித்தேன். அவர் புன்முறுவலுடன் ஏதோ சொல்ல வாயெடுத்தார். அதற்குள்ளாக என் தாயார் அங்குவந்து சுடுசொல் கூறினார். நான் வாளாநின்றேன். அவர் ஒன்றும் பேசாமல் போய்விட்டார். அதுமுதல் அவரைக் காணவில்லை. இனி காண்பேனோ என்னமோ? ஒருமுறை பார்த்து என் கருத்தைக் கூறினால் அல்லாமல் மனம் சாந்தியடையாது.

மனோன்மணி, “வாணி! இருவர் மனமும் ஒன்றானால் வாய் பேசாமல் கருத்தை உணர்வார்கள். அதில் ஒன்றும் ஐயம் இல்லை என்றாள். இவ்வாறு பேசும்போது, மனோன்மணியின் உடல் நடுங்கிற்று. "எனக்கு இப்படி உடம்பு உடம்பு அடிக்கடி அடிக்கடி நடுங்குகிறது. ஏனோ தெரியவில்லை !" என்றாள்.

66

"குளிர்காற்றில் இருப்பது கூடாது. உள்ளே வா அம்மா! இதோ மழையும் வருகிறது.’

“அதென்ன, ஊர்ப்பக்கமாக வெளிச்சம் தெரிகிறது? கூச்சலும் கேட்கிறது? போர்க்குறி காணப்படுகிறது ... ... வாணி! அதென்ன, சொல்” என்றாள் மனோன்மணி.

"சொல்லுகிறேன், உள்ளே வா”என்று வாணி கூற, இருவரும் உள்ளே சென்றனர்.