உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

சாரும்வரை குறியாது தன்னிழலை யளக்குந்

தன்மையென நான் நடக்கத் தான்வளரும் அடவி. ஆரிருளில் இனிநடக்க ஆவதிலை. உடல

மாறும்வகை வீடுளதே லடையுநெறி யருளாய். என்றமொழி கேட்டமுனி யெதிர்விடையங் கியம்பும்:

"ஏகாந்தப் பெருங்ககனம்; இதிலுலக ரணையார்; சென்றுறைய மடமுமிலை; திகழ்வெளியென் வீடு;

சிந்தையற நொந்தவர்க்குச் சேரவிலை பந்தம்.

அறங்கிடந்த சிந்தையரா யாசையெலாந் துறந்த

அதிவீர ரொழியஎவ ராயினுமிங் கடையார். உறங்கஅவர் பணிப்பாயும் பூவணையும் உன்னார் உண்ணவெனில் பாலமிழ்தும் ஒன்றாக மதியார்.

ஆதலிலென் பாலுறுவ தியாதெனினு மைந்த!

அன்புடன் நீ யென்பிறகே யணையிலஃ துனதாம். வேதனையும் மெய்ச்சலிப்பும் விட்டகல இருளும்

விடியும். உடன் மனமிருக்கில் வேண்டுமிடம் ஏகாய்,

183

2

3

4

LO

5

செ. 2. வரை - அளவு, எல்லை. வரை குறியாது நிழலை அளத்தல் - தன் நிழலை அளக்க விரும்பிய ஒருவன், அந் நிழலின் ன் எல்லையைக் குறிக்காமலே அளக்கத் தொடங்கினால் அது அளவுக்கு அகப்படாமல் நீண்டுகொண்டே போகும் என்பது. ஆரிருள் - நிறைந்த இருள். உடல மாறும் வகை - உடலம் ஆறும் வகை என்றும், உடலம் மாறும் வகை என்றும் பிரித்து இருபொருள் கொள்க. வீடு - இல்லம், மோட்சம்.

செ. 3. ஏகாந்தம் - தனித்த இடம். பெருங் ககனம் பெரிய வெளி. சேர மாட்டார்கள். சிந்தை அற – மனம் இல்லை

அணையார்

யாகும்படி. பந்தம் - உலகப் பற்று, கட்டு.

மலர் அணை;

செ. 4. பணிப் பாய் - அலங்காரப் பணி செய்யப்பட்ட பாய், திருமால் பள்ளிகொள்ளும் பாம்பாகிய பாய். பூஅணை – பிரமன் இருக்கிற வெண்டாமரையாகிய அணை நினைக்க மாட்டார்கள்.

உன்னார்

துன்பம். மெய் - உடம்பு. சலிப்பு

களைப்பு.

செ. 5. வேதனை விடியும் - நீங்கும், போகும்.