உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

மான்மறவாக் கலையினமே! வாழ்பிடிவட் டகலா மதம்பெருகு மாகுலமே! வன்பிகமே! சுகமே! நான்மறவா நாதனையெஞ் ஞான்றுமறி வீரோ?

193

நவில்விரெனப் பின்தொடர்ந்து நாளனந்தங் கழித்தேன். 42

இவ்விடமும் அவ்விடமும் எவ்விடமும் ஓடி

இதுவரையும் தேடியுமென் அதிபரைக்கண் டிலனே, எவ்விடம்யான் நண்ணவினி? எவ்விடம்யான் உண்ண? இக்காயம் இனியெனக்கு மிக்கஅரு வருப்பே.

ஐயோவென் உள்ளநிலை அறியாரோ இனியும்?

ஆசைகொண்டு நானலைந்த தத்தனையும் பொய்யோ?

43

பொய்யேதான் ஆயிடினும் புனிதரவர் தந்த

போதமலால் வேறெனக்கும் ஓதுமறி வுளதே?

நல்லர்அரு ளுடையரென நம்பிஇது வரையும்

44

நானுழைப்ப தறிவரெனில் ஏனெதிர்வந் திலரோ? இல்லையெனில் என்னளவும் இவ்வுலகம் அனைத்தும் எந்நலமும் கொல்லவென எடுத்தசுடு காடே.

45

செ. 42. மான் - பெண்மான். கலை - ஆண்மான். பிடி - பெண்யானை. மா மிருகம். இங்கு ஆண்யானையைக் குறிக்கிறது. வன்பிகம் - வலிமையான குயில். சுகம் - கிளி. எஞ்ஞான்றும் - எப்போதாவது. நவில்விர் - சொல்லுங்கள். அனந்தம் முடிவில்லாத (பல). இச் செய்யுளுக்குக் குறிப்புப்பொருள்: மால் (மயக்கத்தை) விடாத 64 கலைஞானங்களே! பிடிவாதமே வாழ்வாகக்கொண்ட மதச் சச்சரவு உடைய ஆகுலமே! (ஆரவாரங்களே!) அநித்தமாகிய ஜடதுக்க முள்ள இகலோகங்களே! சுகமுள்ளவை என்று கூறப்படுகிற இந்திர லோகம் முதலிய பரலோகங்களே என்பது.

செ. 43. காயம் - உடம்பு. அருவருப்பு - வெறுப்பு.

செ. 44. புனிதர் - சுத்தமானவர். போதம் - அறிவு.