உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

66

227

அது வந்த காரணத்தை அவனே அறிவான்" என்றான்

நாராயணன்.

66

உனக்குத் தெரியாதா” என்று அரசன் மீண்டும் கேட்க, நாராயணன், “இவன் பக்கத்திலிருந்த ஒரு சேவகன், தன் கையிலிருந்து பொன் காப்பைக் காட்டி, 'நீ என் தங்கைக்குச் செய்த இழிவை இப்படித் தீர்த்துக்கொள்கிறேன்' என்று சொல்லி வேலினால் இவன் நெஞ்சில் குத்தினான் என்று பலர் சொல்லக் கேட்டேன்” என்று கூறினான்.

அப்போது, குடிலன் தன் கையிலிருந்த பொற்காப்பைக் காட்டிக் கூறுகிறான். “நன்றாயிருக்கிறது. இது அரண்மனைக்குரியது. இதோ அரண் மனை முத்திரை இதில் இருக்கிறது. வாணியுங்கூட இதில் கலந்திருக் கிறாள்போல் தெரிகிறது. அரசே! விடை கொடுங்கள், நாங்கள் போகிறோம். எங்கள் மேல் வஞ்சகர் பழி சுமத்துகிறார்கள்” என்று கூறித் தன் கை விரலில் அணிந்திருந்த அமைச்சு மோதிரத்தைக் கழற்றி நீட்டுகிறான்.

அரசன் நாராயணனை நோக்கி, “எவ்வளவு சூது! உத்தமன் போல நடித்தாய்! கள்ளன்! துட்டன்! சுவாமித் துரோகி! அமைச்சரே! சேவகரே! நாராயணன் நன்றிகெட்ட பாதகன்! நாம் இட்ட கட்டளையை மறந்து கடமை தவறினான். நமது அரண்மனையில் இருந்த பொற்காப்பைத் திருடினான். அதனை ஒருத்தனுக்குக் கொடுத்து பலதேவனைக் கொல்லத் தூண்டினான். உத்தரவு இல்லாமல் போர்க்களத்தில் வந்து யானைப்படை, தேர்ப்படை, குதிரைப் படைகளைக் கலைத்துக் குழப்பம் செய்து நமக்குத் தோல்வியை உண்டாக்கினான். இவனைக் கொண்டுபோய்க் கழுவேற்றுங்கள். நமது ஆணை!" என்றான்.

66

அரசர் கொடுக்கும் தண்டனைக்கு நான் அஞ்சவில்லை. இத்தனை காலம் ஆகியும் உண்மை அறியவில்லை. அரசர் குலம் வாழ்க!” என்றான் நாராயணன்.

அரசன் படைத்தலைவனை நோக்கி, "நீதியிலிருந்து தவற வில்லை. இவனுக்குச் சரியான தண்டனைதான் அது. விரைவாகக் கொண்டுபோய் இவனைக் கழுவில் ஏற்றுக” என்று கூறினான்.

அதுகேட்ட வீரன்! “அரசரின் கட்டளைப்படியே செய்கிறேன். வாருங்கள் குடிலரே!” என்று குடிலனை அழைத்தான். அரசன், வீரனைக் கோபத்துடன் நோக்க, "தாங்கள் கூறியன எல்லாம் குடிலருக்குத்தான் பொருந்தும். வேறு யாரும் தவறு செய்யவில்லை" என்று கூறினான்.