உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

229

மரத்தையே போற்றுவர் பெரியோர். அடிகளே ! என் உயிரைப் போரில் போக்குவேன் ! அதுவே என் முடிவு” என்றான் அரசன்.

!

"அரசே! பொறும்; பொறும். நெருப்புக் கோழி தன் தலையை மட்டும் மறைத்துக்கொண்டு, தன் உடல் முழுவதும் மறைந்திருப்பதாக நினைத்துக்கொள்வது போல இருக்கிறது உம்முடைய நியாயம். அலைகொலை புரிந்து. கொள்ளை யிடுவோர், களவு செய்து பிறர் பொருளைப் பறிப்போர் முதலிய குற்றவாளிகளும் அகப்பட்டுக் கொண்டால் மரணத்துக்கு அஞ்சாமல் கழுவேறுகிறார்கள். துன்பம் வந்தால், அதனைப் பொறுப்பதா அல்லது உயிர்விடுவதா தகுதி? கடலில் போகும் மரக்கலம் புயல்காற்றில் அகப்படுமானால், அதனை ஒரு இடத்தில் சேர்த்துப் புயல் போகும் அளவும் காத்திருந்து, மீண்டும் பிரயாணம் மேற்கொள்வான் மாலுமி. அப்படியின்றி அதனைப் புயலில் அகப்பட விட்டு அழித்துவிடுவான் அல்லன். புகழுக்காக உயிர்விடத் துணிந்தீர்; ஆனால் உனது கடமையை மறந்தீர். நீர் நம்பிய பாய்மரம் பழுது. கோட்டையை நம்புவதில் பயனில்லை. பெருங்காற்று அடங்கும் வரையில் ஒதுங்கியிருப்பது நல்லது” என்று கூறினார் முனிவர்.

அரசன் அதற்கு இணங்கவில்லை. போர் செய்து களத்தில் உயிர் டுவதே தன் கருத்து என்பதை வற்புறுத்துகிறான். முனிவர், இளவரசி மனோன்மணியைக் காப்பது அவன் கடமை என்றும், அரசன் காக்காமற்போனால் அவளைக் காப்பது தமது கடமை என்றும் கூற, அதற்கு என்ன உபாயம் உள்ளது என்று அரசன் கேட்கிறான். முனிவர், கோட்டையிலிருந்து தமது ஆசிரமத்துக்கு ஒரு சுரங்க வழி செய்திருப் பதாகவும், அவ்வழியின் வாயிலாக அரசனும் அரச குமாரியும் தப்பிச் செல்ல முடியும் என்றும் கூற, அரசன், இளவரசியை அதன் வழியாகத் தப்பிவைக்கும்படியும் தான் போர் செய்யப் போர்க்களம் செல்லப் போவதாகவும் கூறி, சுரங்க வழியைக் காட்டும் படி கேட்கிறான். முனிவர், நள்ளிரவில் வந்து காட்டுவதாகச் சொல்லிப் போகிறார்.

அரசன் இளவரசிக்காகக் கவலைப்படுகிறான். முனிவர்மீதும் ஐயம் கொள்கிறான். 'சுரங்க வழியைக் காட்டாமலே போய் விட்டார். உண்மையில் சுரங்கம் உண்டா? இல்லையா? சுரங்க வழியை முனிவர் கட்டி யமைக்க முடியுமா? இவரால் அல்லவா இந்தப் போர் வந்தது? இவர் சொல்லிய திருமணம் காரணமாகத் தானே புருஷோத்தமன் போர் செய்ய