உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

253

ஓ! ஓ! இதனால் உண்டோர் பெரும்பயன்.

(மறுபடியும் வாளை எடுத்து நோக்கி நிற்க, சேவகர் ஓடிவர)

போ! போ! வெளியே போரிடைப் பொலியாது வாளா இருந்த வாளுக் கீதோ

(நாராயணன் வர)

நாரா:

40

எனாதுயிர் ஈவேன், வினாவுவர் யாவர்? மனோன்மணி தன்னை மறந்தாய் போலும்!

ஜீவ:

குழந்தாய்! குழந்தாய்!...

(விழுந்து மூர்ச்சிக்க)

சேவகர்: நாரா:

கொற்றவா! கொற்றவா!

பேசன்மின்!

(அரசனை மடியில் தாங்கி)

முதற் சேவ:

பேசன்மின்!

நாரா:

வீசுமின்! அகன்மின்!

முதற் சேவ:

வெளியே!

4-ம் சேவ:

பனிநீர்...

நாரா:

ஜீவ:

நாரா: ஜீவ:

45

தெளிநீ சிறிது.

குழந்தாய்! குழந்தாய்! கொன்றேன் நின்சீர்!

(எழுந்து சோர்வாயிருக்க)

இழந்தால் இருப்பளோ? என்செயத் துணிந்தாய்? நஞ்சே எனக்கியான்! என்செய் வேனினி! இருதலைக் கொள்ளியில் எறும்பா னேனே!

செருமுகத்து இரிந்தென் மானம் செகுத்தும்

பொலியாது- விளங்காமல். அகன்மின் - அகலுங்கள். “இருதலைக் கொள்ளி எறும்புபோல" என்பது பழமொழி. செருமுகம் போர்க்களம். செகுத்து -அழித்து, கொன்று.