உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254

நாரா:

ஜீவ:

நாரா:

ஜீவ:

முதற் சேவ:

ஜீவ:

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20

உயிரினை ஓம்பவோ உற்றது? ஓர்சிறு 50 மயிரினை இழக்கினும் மாயுமே கவரிமா. பெருந்தகை பிரிந்தும்ஊன் சுமக்கும் பெற்றி மருந்தாய் எனக்கே இருந்ததே நாரணா!

55

60

65

70

மன்னவ! யார்க்கும் தன்னுடல் மாய்த்தல் அரிதோ? பெரிதாம் அஞர்வந் துற்றுழிக் கருதிய தமரைக் காட்டிவிட் டோடி ஒளிப்பதோ வீரமென் றுன்னினை?

ஓ! ஓ!

போரிடை ஓடுவோன் வீரம்நா டுவனோ?

காலமும் களமும் கண்டு திரும்புதல் சாலவும் வீரமே. தக்கவை உணரும் தன்மையில் சௌரியம் மடமே, சூழ்ச்சிசேர் வன்மையே வீரத் துயிராம் மன்னவ!

போதும்! போதும்நின் போலி நியாயம்! சாதலுக் கஞ்சியோர் தனையளுக் காகச் சூதக உடம்பைச் சுமக்கத் துணிந்தேன். மன்னனும் அல்லன். வழுதியும் அல்லன்!

(சேவகரை நோக்கி)

என்னுடன் இருமின்! ஏன்நிற் கின்றீர்? இறைவ! ஈதென்னை!

இறைவனென் றென்னை

இசைப்பது வசையே. இஃதோ காண்மின்! அசைந்த தொருநிழல். அஃதோ யானெனப் பாருமின், பாண்டியன் போரிடைப் பட்டான் வாரும்! வாரும்! இருமின் யாவரும்.

பெற்றி - தன்மை. மருந்து -அமிர்தம். அஞர் -துன்பம், வருத்தம். சௌரியம் -வீரம். தனையள்- மகள். சூதக உடம்பு -அசுத்த உடம்பு.