உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

255

நாரா:

வீணாய் வெற்றுரை விளம்பலை வேந்தே! காணாய் அஃதோ! அவர்விடும் கண்ணீர்.

(சேவகர் அழுதலை நோக்கி)

ஜீவ:

வம்மின்! வம்மின்! எம்மனீர்! ஏனிது?

முதற் சேவ:75

பருதிகண் டன்றோ பங்கயம் அலரும்? அரச நீ துயருறில் அழுங்கார் யாரே?

ஜீவ:

நாரா:

பிரியசே வகரே! பீடையேன்! துயரேன்! இழந்தனம் முற்றும் என்றோ எண்ணினீர்! அழிந்ததோ நம்மரண்? ஒழிந்ததோ நம்படை?

80 மும்மையில் இம்மியும் உண்மையில் இழந்திலம். வெல்லுவம் இனியும்: மீட்போம் நம்புகழ். அல்லையேற் காண்மின்!

85

அதற்கென் ஐயம்?

இறைவ!இப் போதுநீ இசைத்தவை சற்றும் குறைவிலை. தகுதியே. கூறிய படியே

ஆவது காண்குவம். அழகார் அம்புயப் பூவின துயர்வு பொய்கையின் ஆழத் தளவா வதுபோல், உளமது கலங்கா ஊக்கம் ஒருவன தாக்கத் தளவெனத் துணிவார்க் குறுதுயர், தொடுமுன் எவ்வும் 90 அணியார் பந்துறும் அடிபோல், முயற்சியில் இயக்கிய இன்பம் பயக்குமென் றிசைக்கும்

சான்றோர் சொல்லும் சான்றே அன்றோ? ஆதலின் இறைவநீ ஓதிய படியே

அழுங்கு - அழு. பீடை - துன்பம். பருதி - சூரியன். மும்மையில் - மூன்று ஆற்றல்களில். மூன்று ஆற்றல்களாவன: அறிவு, ஆண்மை, பெருமை என்பன.

85 - 87 அடிகளின் கருத்து, “வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம், உள்ளத்தனைய துயர்வு” என்னும் திருக்குறளின் கருத்தையுடையது. எவ்வும் எழுகின்ற. அணியார் பந்து அழகான பந்து. இசைக்கும் கொல்லும்.