உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260

குடி:

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -20

ஆயினும் அத்தனை நோவதற் கென்னே? வாளுறை சேர்த்திலம்! நாளையும் போர்செயக் கருதினோம்! உறுதி! வெருவியோ மீண்டோம்?

175 வஞ்சியர் நெஞ்சமே சான்றுமற் றதற்கு. மீண்டதிற் குறைவென்? ஆ! ஆ! யாரே வெருவினார்? சீ! சீ! வீணவ் வெண்ணம்! இருதினம் பொருதனர் சிறுவனை வெலற்கென் றொருமொழி கூறநம் உழையுளார் சிலர்செய்

(நாராயணன் நின்றவிடம் நோக்கி)

180 சதியே யெனக்குத் தாங்காத் தளர்ச்சி

அதுவலால் என்குறை மதிசூல மருந்தே! சென்றுநாம் இன்று திரும்பிய செயலே நன்றெனப் போர்முறை நாடுவோர் நவில்வர். செவ்விதில் ஓடிநாய் கௌவிடும். சிறந்த 185 மடங்கலோ எதற்கும் மடக்கியே குதிக்கும்.

குதித்தலும் பகையினை வதைத்தலும் ஒருகணம். நாளைநீ பாராய்! நாந்தூ தனுப்பும்

வேளையே அன்றி விரிதலை அனந்தை ஊரார் இவ்வயின் உற்றதொன் றறியாச் 190 சீராய் முடியுநம் சிங்கச் செருத்திறம்! மீண்டோம் என்றுனித் தூண்டிலின் மீனென ஈண்டவன் இருக்குக: இருக்குக, வைகறை வரும்வரை இருக்கில் வத்தவிவ் வஞ்சியர் ஒருவரும் மீள்கிலர். ஓர்கால் இக்குறி

195 தனக்கே தட்டிடில் தப்புவன் என்பதே

எனக்குள துயரம். அதற்கென் செய்வோம்! ஆதலின் இறைவ! அஞ்சினேம் என்றொரு

போதுமே நினையார் போர்முறை அறிந்தோர்.

எவ்விதம் ஆயினும் ஆகுக. வைகறை,

ஜீவ:

-

வெருவு - பயப்படு. மடங்கல் - சிங்கம். அனந்தை ஊர் - திருவனந்த புரம். தூண்டிலின் மீனென தூண்டில் முள்ளில் சிக்கிய மீனைப்

போல.