உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

நாரா:

குடி:

ஜீவ:

குடி:

ஜீவ:

குடி:

ஜீவ:

(தனதுள்)

மெத்தவும் நன்றிந் நாடகம் வியப்பே! மற்றக் கோழைக் குற்றதெப் படிப்புண்?

150 போரிடை உளதன் றியார்செய் தனர்பின்? உணர்குவம் இப்பேச் சோய்விலாப் பழங்கதை.

259

(நாராயணன் போக)

சித்தமற் றவ்வகை தேர்ந்துள தென்னில், இத்தனை கருணையும் எனக்கென அருளுதி, பாதநற் பணிவிடை படைத்தநாள் முதலா 155 யாதுமொன் றெனக்கா இரந்திலன். உணர்வை ஓதிய படியென் உரங்கிழித் துய்ப்பையேல் போதுமிங் கெனக்(கு)அப் போதலோ காண்குவர் மன்னுல குள்ளம் என்னுள நிலைமை! உன்பெயர்க் குரிய ஒவ்வோர் எழுத்தும் 160 என்னுரத் தழியா எழுத்தினில் எழுதி

இருப்பதும் உண்மையோ இலையோ என்பது பொருக்கெனக் கிழித்திங் குணர்த்துதி புவிக்கே.

(முழந்தாளூன்றி நின்றழ)

அழுவதேன்? எழு! எழு! யாரறி யார்கள்! உன்னுளம் படும்பா டென்னுளம்அறியும்.

165 என்னது பவங்கேள் குடிலா! ஈதோ சற்றுமுன் யானே தற்கொலை புரியத்

துணிந்துவாள் உருவினேன். துண்ணென நாரணன் அணைந்திலன் ஆயினக் காலை...

ஐயோ!

தடுத்தான்; விடுத்தேன்!

(தனதுள்)

கெடுத்தான் இங்கும்!

170 அரியே றன்ன அமைச்ச! பெரியோர்

தரியார்; சகியார் சிறிதொரு சழக்கும்.

உய்ப்பையேல் - உய்த்துபோகச் செய்தால் (உய்தல் - பிழைத்தல்).

சழக்கு குற்றம்.