உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258

ஜீவ:

குடி:

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20

முற்றிலும் வெல்லுதும் நாளை, அதற்கா 125 ஐயுறேல்! அஞ்சலை! ஆயிரம் வஞ்சியர்

நணுகினும் நாளை...

நாயேற் கதனில்

அணுவள் வேனும் இலையிலை அயிர்ப்பு. நெடுநாள் ஆக நின்பணி விடைக்கே உடலோ டாவியான் ஒப்பித் திருந்தும், 130 கெடுவேன், அவையிக் கிளர்போ ரதனில் விடுமா றறியா வெட்கமில் பதடியாய்க் கொடியார் சிலர்செய் கொடுஞ்சூ ததனால் தடுமா றடைந்தென் தகைமையும் புகழும் கொடுமா றுகுத்த கெடுமதி ஒன்றே

135 கருத்திடை நினைதொறும் கண்ணிடு மணல்போல், உறுத்துவ திறைவ! ஒவ்வொரு கணமும். பகைவர்தம் படைமேற் படுகிலா வுடலம் கெடுவேற் கென்னோ கிடைத்ததிங் கறியேன்! அடுபோர்க் களத்தியாண் டடைந்திலன்! ஐயோ! 140 வடிவேல் ஒன்றென் மார்பிடை இதுபோல்

(பலதேவனைக் காட்டி)

படுமா றில்லாப் பாவியேன் எங்ஙனம் நோக்குவன் நின்முகம்? காக்குதி! ஐயோ! தாக்குறு பகைவர் தம்படை என்னுயிர் போக்கில. நீயே போக்குதி! காக்குதி! 145 இரக்கமுற் றுன்திருக் கரத்துறை வாளிவ் உரத்திடைஊன்றிடில் உய்குவன். அன்றேல்...

ஜீவ:

உத்தம பத்தியில் உனைப்போல் யாரே!

தடுமாறு தடுமாற்றம். தகைமை -பெருமை. உரம் - மார்பு.

(அழுது)