உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

ஜீவ:

முதற் சேவ:

ஜீவ:

269

55

அழைநா ரணனை.

(முதற் சேவகனை நோக்கி)

அடியேன்

நொடியில்.

(சேவகன் போக)

குடி:

பழமையும் பண்பும்நாம் பார்க்கிலம் பாவி! இத்தனை துட்டனோ? ஏனிது செய்தான்?

சுத்தமே மடையன்! சுவாமீ! பொறுத்தருள். என்னதே அப்பிழை. மன்ன! நீ காக்குதி! 60 வருபவை உன்திரு வருளால், வருமுன் தெரிவுறும் அறிவெனக் கிருந்தும், திருவுளம் நிலவிய படியே பலதே வனைப்படைத் தலைவனாய் ஆக்கிடச் சம்மதித் திருந்தேன். எனதே அப்பிழை, இலதேல் இவ்விதம் நினையான் இவனுயிர் நீங்கிடப் பாவி! அதன்பின் ஆயினும் ஐயோ! சும்மா இதமுற இராதுபோர்க் களமெலாம் திரிந்து கடிபுரிக் காவற் படைகளும் தானுமாய் இடம்வலம் என்றிலை: இவுளிதேர் என்றிலை: 70 கடகயம் என்றிலை: அடையவும் கலைத்து,

65

கைக்குட் கனியாய்ச் சிக்கிய வெற்றியை

ஜீவ: குடி: ஜீவ:

கண்டனம் யாமே.

காலம்! காலம்!

கொண்டுவா நொடியில்,

(விம்மி)

(2-ஆம் சேவகனை நோக்கி)

கடிபுரி - கோட்டை இவுளிதேர் - குதிரைப்படை, தேர்ப்படை. கடகயம் – மதம் பொருந்திய யானை. கைக்குட்கனி - உள்ளங்கை நெல்லிக் கனி.