உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268

35

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20

அளிப்பையே களிப்புடன் அமைச்சும் தலைமையும்! அத்தனை அன்புநீ வைத்துளை!

ஜீவ;

குடி:

ஆ! ஆ!

எத்தனை துட்டன்! எண்ணிலன் சற்றும்! ஐயோ! எனக்கிவ் வமைச்சோ பெரிது?

தெய்வமே அறியுமென் சித்த நிலைமை! 40 வெளிப்பட ஒருமொழி விளம்பிடில் யானே களிப்புடன் அளிப்பனக் கணமே அனைத்தும். விடுவேம் அதற்கா வேண்டிலெம் உயிரும்!

(அழுது)

(பலதேவன் மார்பைக் காட்டி)

போர்முகத் திங்ஙனம் புரிதலோ தகுதி?

ஜீவ:

யார்? யார்? நாரணன்?

(பலதேவனை நோக்கி)

பலதே:

ஜீவ:

குடி:

ஜீவ:

ஆம்! அவன் ஏவலில்

45

வம்பனங் கொருவன்...

குடி:

நம்பகை அன்றுபின்!

நின்பகை அன்றுமற் றென்பகை இறைவ!

உன்பகை என்பகை! ஓ! ஓ! கொடியன்! செய்குவன் இப்போ தேசிரச் சேதம்! இடங்குழம் பியதிங் கிதனாற் போலும்?

50 அடங்கலும் இதனால் ஐய! அன்றேல், இடப்புறம் வலப்புறம் யாதே குழம்பும்? மடப்பயல் கெடுத்தான்! மன்ன! நம் மானம்! ஒருமொழி அல்லா திருமொழி ஆயின்

வெருவர வெம்படை வெல்லுவ தெங்ஙனம்!

ஒரு மொழி அல்லாது இருமொழி ஆயின் - ஒருவர் கட்டளை டாமல் இருவர் கட்டளையிட்டால் என்பது கருத்து.