உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

நாரா:

ஜீவ:

நாரா:

ஜீவ:

நாரா:

நெடுநாள் அறிவன்!

நானே அவனிங் கவனே யானும்.

ஆனால் நன்றே, அரசமைச் சென்றிலை.

கேட்டது கூறுதி.

கேட்டிலை போலும்.

ஜீவ:

95 கடிபுரி காத்தைகொல்?

காத்தேன் நன்றாய்.

271

நாரா:

ஜீவ:

நாரா:

ஜீவ:

நாரா: 100

ஜீவ:

காத்தையேல் அகழ்க்கணம் தூர்த்ததென்பகைவர்?

தூர்த்ததுன் பகையல. துரத்திய படைப்பிணம். பார்த்துமேற் பகருதி.

பார்த்தனம் உன்னை

ஆர்த்தபோர்க் களத்திடை. அதுவோ காவல்?

உன்னையும் காத்திட உற்றனன் களத்தில். என்னையும் கபட நாடகம்? இனிதே! அவனுரம் நோக்குதி. அறிவைகொல்?

நாரா:

ஜீவ:

நாரா:

ஜீவ:

நாரா:

எவனது செய்தவன்?

(பலதேவனைக் காட்டி)

அறிவேன்.

அவனே அறிகுவன்.

ஒன்றும்நீ உணர்கிலை?

உணர்வேன். இவன்பால்

105 நின்றதோர் வீரன்:இப் பொற்றொடி யுடையான்: “என்தங் கையினிழி விப்படி எனக்கே

66

99

என்றுதன் கைவேல் இவனுரத் தெற்றிப்

பொன்றினன் எனப்பலர் புகல்வது கேட்டேன்.

பொற்றொடி - பொன் வளையல். 'என் தங்கையின் இழிவு இப்படி எனக்கே'-பல தேவனுடைய சோரக் காதலியின் சகோதரன் பலதேவனை வேலால் குத்தியபோது சொன்ன சொல்.