உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 சுந்தர:

ஜீவ:

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -20

காட்டுதும் இன்றிரா கற்படை சேர்முறை. ஒருவர் ஒருபொருள் அறியில் இரகசியம்; இருவர் அறிந்திடிற் பரசியம் என்ப

கைக்கெட் டியதுதன் வாய்க்கெட் டுதற்குள் 175 வந்துறும் அந்தமில் பிரதிபந் தங்களே.

(முனிவர் போக

வந்தனம். வந்தனம். அடிகாள்! வந்தனம். (தனிமொழி)

என்னே! என்னே! இந்நாள் இயன்றவை! கொன்னே கழிந்தன் றோரிமைக் கொட்டும். குகுநாள் மழையொடு மிகுகாற் றெறிந்த 180 பரவையின் பாடெலாம் பட்டதென் உளமே. இரவினில் வருபவை எவையெலாம் கொல்லோ? தாயே! தாயே! சார்வன சற்றும்

ஆயேன், எங்ஙனம் பிரிந்துயிர் ஆற்றுவேன்?

விடுக்குமா றெவனென் விளக்கே? உன்னைக் 185 கெடுக்குமா றெவனிக் கிளர்போ ரிடை? அது தடுக்குமா றெவனினி? சமழ்ப்பற் றுடலம் பொறுக்குமா றெவன்? இப் பொல்லா வல்லுயிர் துறக்குமா றெவனுனைத் துணையற விடுத்தே? அந்தோ! அந்தோ! என்றன் தலைவிதி! 190 நாற்புற நெருப்புறின் நளியும் தனது வாற்புற நஞ்சால் மாய்ந்திடும் என்ப.

நரனலன்; நரேந்திரன்; நானது போற்சுதந் தரனலன் எனிலென் தலைவிதி கொடிதே!

பிரிவென என்னுளம் கருதிடு முனமே

172 - 173 அடி, 'ஒருவர் அறியில் இரகசியம், இருவர் அறிந்தால் பரசியம்' என்பது மலையாள நாட்டுப் பழமொழி.

174 - 175 அடிகள், 'There is many a slip between the cup and the lip' என்னும் ஆங்கிலப் பழமொழியைக் கூறுகின்றன. பிரதிபந்தங்கள் தடைகள். குகுநாள் - அமாவாசை நாள், உவா நாள். பரவை - கடல். எவன் – எவ்விதம். சமழ்ப்பு - குற்றம், நாணம். நளி - தேள்.