உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

195 பிரையுறு பாலென உறைவதென் உதிரம். நாணா துன்முகம் காணுவ தெவ்விதம்? நடுநிசிப் பொழுது தொடுகற் படைவழி

முனிவரன் பிறகுனைத் தனிவழி விடுத்திவண் தங்குவன் யானும்! தங்குவை நீயும்!

200 இங்கதற் கிசையேன். இறக்கினும் நன்றே! (மௌனம்)

கற்படை இதுதான் எப்புறத் ததுவோ! உரைத்திலர் முனிவர் ஒளித்தனர். இஃதும் உளதோ? இலதோ? உணர்பவர் யாவர்? களவழி இதுமுனி கட்டற் பாற்றோ

205 முனமே முனிவன் மொழிமணம் அன்றோ இனையவிப் போர்க்கெலாம் ஏதுவாய் நின்றது!

கூடிய தன்றது! ஏ! ஏ! குடிலனை

ஓடியிங் கழையாய்!

உண்மையெப் படியென

(சேவகன் வர)

(சேவகன் போக)

நாடுமுன் வாடி நலிதல் என்பயன்? 210 நம்புதல் எல்லாம் துன்பமே தருவது. நம்பினோம் நாரா யணனை, அதற்கா வம்பே செய்தான் மாபா தகனவன். நட்பே நமக்கிங் குட்பகை யானது!

முனிவரோ முதுநகர் விடுத்தநாள் முதலா 215 மனத்திடைக் களங்கம் வைத்துளர். அஃதவர் விளம்பிய மொழியே விளக்கிடும். நன்றாய் ஆரா யாமுனம் அனுப்புதல் தவறே.

(குடிலன் வர)

289

பிரையுறு பால் என – உரை குற்றிய பால்போல. தொடு கற்படை – தோண்டி அமைக்கப்பட்ட சுரங்க வழி. களவழி - கள்ள வழி, சுரங்க வழி. நலிதல் - வருந்துதல். களங்கம் - வஞ்சனை, மாசு.