உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290

குடி:

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -20

வாராய் குடில! மந்திரி உனக்கு

நேர்தான் ஆரே! நிகழ்ந்தவை அறிவைகொல்? 220 சுந்தர முனிவரோர் சுருங்கைதொட் டுளராம்; நந்தமை அழைத்தனர் ஒளித்திட அவ்வழி; மறுத்திட, மனோன்மணி யேனுமங் கனுப்பென ஒறுத்தவர் வேண்டினர்; உரியநம்; குலமுனி ஆதலின் ஆமென இசைந்தோம்; அவ்வழி 225 யாதென வினாயதற் கோதா தேகினர்; பாதிரா வருவராம். பகர்ந்தவிக் கற்படை மெய்யோ பொய்யோ? மெய்யினில் எவ்வயின் உளதென உணர்தியோ? ஒழுங்குகொல், நமது இளவர சியையங் கனுப்புதல்?

இறைவ!

230 முன்னர்நாம் ஒருநாள் இந்நகர் காண

அழைத்தோம்! அந்நாள் யாதோ பூசை இழைத்திட வோரறை இரந்தனர்.

ஜீவ:

குடி:

ஜீவ:

குடி:

அவ்வறை எவ்வறை?

அதுயான் அறிவேன்.

ஆம்! ஆம்!

செவ்வே வடக்குத் தேம்பொழிற் கிப்புறம்.

235 மறுமுறி மணவறை,

(தனதுள்)

(ஜீவகனை நோக்கி)

அறிவிது வெகுநலம்;

ஜீவ:

உறுவதங் கென்னென உணர்ந்தனை?

உணர்ந்திலேன்.

ஒறுத்து – வருத்தி. செவ்வே வடக்கு – நேர் வடக்கு. மறு முறி - அடுத்த அறை. (முறி - அறை. இது மலையாள நாட்டு வழக்குச் சொல்.) 235 - 243. அரசன் பேச்சைக் கொண்டே சுரங்கம் இருக்கும் இடத்தைக் குடிலன் யூகித்தறிந்துகொண்டு, அதைத்தான் முன்னமே அறிந்தவன் போலப் பேசுவதை இவ்வடிகள் உணர்த்துகின்றன.