உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20

பள்ள உவர்க்கடலிற் பாய்ந்தோடும் வெள்ளமென உள்ளம் உவந்தோடி ஒன்றானாய்--விள்ளா மணியின தொளியும் மலரது மணமும்

அணிபெறு மொழியின் அருத்தமும் போல,

அந்நிசி யாகவெஞ் ஞான்றும்

மன்னிய அன்புடன் வாழ்மதி சிறந்தே!

(யாவரும் வாழ்த்த)

ஐந்தாம் அங்கம்: மூன்றாம் களம் முற்றிற்று.

(கலித்துறை)

சிறிதா யினும்பற் றிலாதுகை யற்ற திருமகடன்

குறியாந் தலைவன் குடிலன்பின் எய்திய கொள்கைகண்டீர் அறிவோம் எனுநம் அகங்கரம் ஆறும் அவத்தையினிற் செறிவா யிருக்குந் திருக்கு வெளிப்படும் சீரிதுவே.

ஐந்தாம் அங்கம் முற்றிற்று.

6 -க்கு அடி 569

ஆசிரியப்பா வெண்செந்துறை

6 -க்கு அடி

12

கொச்சகக் கலிப்பா

3 -க்கு

அடி

12

மருட்பா

1 -க்கு

அடி

6

ஆக அங்கம் 1-க்குப் பா. 16 -க்கு அடி

599

விள்ளா - விண்டுபோகாத, விட்டுப் பிரியாத. அருத்தம் – பொருள். கையற்ற செயல்அற்ற. குறி அடையாளம். அவத்தை நிலைமை. செறிவாய் நெருக்கமாய். திருக்கு குற்றம். க்கலித்துறை, தன் சுதந்தரம் விட்டு அருள்வழி நின்ற போதம் அதீதப்படும் முறையைக் கூறுகின்றது.