உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

ஜீவ:

எனதுயிர் அவாவிய இவ்வரு மருந்தை நனவினிற் காணவும் நண்ணவும் பெற்றேன். 215 பிரிகிலம் இனிமேல். உரியநின் உரிமை

யாதே ஆயினும் ஆகுக. ஈதோ! மீள்குவன். விடைகொடு நாளையும் வேட்பையேற் காண்போம் ஞாட்பிடை நாட்பே.

உண்மையோ? குடிலா! உரையாய்!

நாரா:

யாவ:

நாரா:

சுந்:

ஜீவ:

335

(குடிலன் முகங் கவிழ்த்து நிற்க)

இதுவுநின்

220 உண்மையோ! மௌனமேன்?

ஓகோ! பாவி!

படபடத் திடுநின் பாழ்வாய் திறவாய்!

விடுவிடு! விசாரணைக் கிதுவன் றமையம்! நன்மையே யாவும் நன்மையாய் முடியின். வாராய் ஜீவக! பாராய் உன்மகள்

225 தாராத் தன்னிரு கைதோள் சூட்டி

எண்படு மார்பிடைக் கண்படு நிலைமை. இருமனம் ஏனினி; என்றுமிப் படியே மருகனு மகளும் வாழ்க! வாழ்த் துதியே.

கண்மணீ! அதற்குட் கண்வளர்ந் தனையோ! 230 உன்னையும் மறந்துறங் குதியேல் இனிமேல் என்னையெங் கெண்ணுவை? இறும்பூ திருவரும் ஒருவரை ஒருவர் உணர்ந்தமை!

(மனோன்மணி திடுக்கிட்டு விழிக்க)

வெருவலை! மணியே! பிரியீர் இனியே!

3

நண்ணவும் - அடையவும். வேட்டையேல்

விரும்புவாயானால்.

ஞாட்பிடை போர்க்களத்தில். தாரா - மாலையாக. எண்படு கருதப்படும். கண்படு துயில்கின்ற. இறும்பூது - வியப்பு, ஆச்சரியம். வெருவலை – அஞ்சாதே.