உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 50.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49

(14

வல்லான் வகுத்த வழி

நான் பள்ளியிறுதி மாணவனாயிருந்தபோது ஆங்கிலப் பற்றாளனாக வும் பேச்சாளனாகவு மிருந்ததனால், என் பயிற்சி முடிந்தபின் ஆங்கில இலக்கியத்தை, சிறப்பாகச் சேக்கசுப்பியரின் முப்பானேழ் நாடகங்களையும், கற்றாய்ந்து கரைகண்டு எருதந்துறை யாங்கிலப் பேராசிரியனாக அமர விரும்பினேன். ஆயின், எதிர்பாராத சில சூழ்நிலைகளால் என் மனம் தமிழ்ப் பணிக்கு ஈர்க்கப்பட்டுவிட்டது.

அதன்பின், மொழியாராய்ச்சியில் ஆழ மூழ்கித் தமிழின் அடிநிலை கண்டு தமிழே திரவிடத்திற்குத் தாயும், ஆரியத்திற்கு மூலமும் என்னும் உண்மையுணர்ந்ததனாலும், அவ் வாராய்ச்சி முற்றுமாறு மேனாள் சேலங் கல்லூரி முதல்வர் பேரா. இராமசாமி (க்கவுண்டர்) அவர்கள் அக் கல்லூரியில் என்னைத் தமிழ்த்துறைத் தலைவனாக எளிதா யமர்த்திக்கொண்டமை யாலும், நிறைதமிழ் மலையாம் மறைமலையடிகள் என்னைப் பாராட்டி ஊக்கியமையாலும், என் மொழியாராய்ச்சி நூல்கள் பல வெளிவர வாய்ப்பு நேர்ந்தமையாலும், என்னையன்றி வேறெவரும் இவ் வாராய்ச்சி செய்யாமை யாலும், இவ் வாராய்ச்சிக்கு இன்றியமையாத பண்புகளையெல்லாம் இறைவன் என் பிறப்பிலேயே அமைத்துவிட்டமையாலும், ஆங்கிலப் பணியாற்ற விருந்த என்னை இறைவன் தமிழ்ப்பணிக்குத் தடுத்தாட் கொண்டதாகவே கருதுகின்றேன்.

நான் எத்தனையோ நூல்கள் எழுதினும், என் அரைநூற்றாண் டாராய்ச்சியின் தலைசிறந்த பயன், தமிழ்ப் பகைவர் தொகுத்த சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலியைத் திருத்துவதும், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலியொன்று தொகுப்பதுமே. இவ் விரண்டிற்கும் பெருஞ்செலவு செல்லுமாதலால், பல்கலைக்கழகமும் அரசுமே இப் பணியை மேற்கொள்ளத் தக்கன.

அறிவாராய்ச்சி மிக்க இவ் விருபதாம் நூற்றாண்டிலும், தமிழகத்தில் ஆரியம் வேரூன்றியிருப்பதால், ஆரியர் ஆண்ட பேராய ஆட்சியிலும் ஆரிய அடிமையர் ஆண்ட பேராய ஆட்சியிலும், மேற்குறித்த பணி நிகழும் நிலைமை ஏற்படவில்லை.

இந்தியை அடியோடொழிப்போ மென்றும், தமிழிற்காக உயிரைக் கொடுப்போமென்றும், சொல்லிப் புகுந்த தி. மு. க. அரசும், ஆட்சியேற்று