118
மறைமலையம் -6
(சதுரிகை வருகின்றாள்.)
சதுரிகை : வேந்தற்கு வெற்றிசிறக்க! துகிலிகை வைத்த பெட்டகத்தை எடுத்துக்கொண்டு எடுத்துக்கொண்டு இவ்வழியாய் வந்து கொண்டிருந்தேன்.
அரசன் : அப்புறம் என்னை?
சதுரிகை : அப்போது அவ்வழியே தரளிகையுடன் வந்த வசுமதி அரசியார் "நானே இதனை என் பெருமானிடத்திற் சேர்ப்பிக்கின்றேன்” என்று அதனை வலிந்து பிடுங்கிக்
கொண்டார்.
விதூஷகன் : நல்ல காலமாய் நீ தப்பி வந்து விட்டாயே! சதுரிகை : அருகிருந்த கிளையில் அரசியாரது மேலாடை மாட்டிக்கொள்ள அதனைத் தரளிகை விடுவித்தெடுத்துக் கொண்டிருக்கையில் நான் மறைவாய் வந்து விட்டேன்.
மனக்
அரசன் : தோழா! அரசி வருகின்றாள்; கொதிப்பினால் அவள் செருக்கடைந்திருக்கின்றாள். இந்த ஓவியத்தைக் காவலாய் வைத்திரு.
விதூஷகன் : 'நீ காவலாயிரு' என்று சொல்லும். (ஓவியப் பலகையை எடுத்துக்கொண்டு எழுகின்றான்.) உவளகத்து மகளிரின் பிணக்குகளினின்றும் நீர் தப்பிவந்த பின் மேகபிரதிச்சந்தம் என்னும் அரண்மனையிலிருக்கும் என்னைக் கூப்பிடும். (விரைவாய் நடந்துபோய்விட்டான்.)
சானுமதி : தம்நெஞ்சத்தை வேறொருவர்க்கு இடமாய்க் கொடுத்தும், தம் முதன்மனையாளிடம் இவர் நன்கு மதிப்புடையராய் ஒழுகுகின்றார்.எனினும், இவர் இவளிடத்து வேண்டா விருப்புடையராகவே யிருக்கின்றார்.
(பிரதீகாரி கையில் ஒருகடிதத்தொடு வருகின்றாள்.) பிரதீகாரி : வேந்தற்கு வெற்றி சிறக்க!
அரசன் : வேத்திரவதி! நீ வழியில் அரசியைப் பார்க்க வில்லையா?