உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 6.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாகுந்தல நாடகம்

117

விதூஷகன் : இவ்வளவு கடுமையாக ஒறுத்தபிறகும் அஃது உமக்கு அஞ்சாமலிருக்குமா? (நகைத்துக்கொண்டு தனக்குள்) இவர் உண்மையிலே வெறிபிடித்தவராய் விட்டார். வருடைய கூட்டுறவால் நானும் அப்படித்தான் ஆய்விட்டேன். (உரக்க) தோழரே ! இஃது ஓர் ஓவியமன்றோ? அரசன் : என்ன, இஃது ஓவியமா?

சானுமதி : யானும் இப்போதுதான் இதனைத் தெரிய லானேன். தன்னா லெழுதப்பட்ட உருவத்தையே நெஞ்சழுந்தி நினைந்து கொண்டிருக்கும் இவருக்கு வேறு எப்படித் தெரியும்?

அரசன் : நண்பா! நீ என்ன இதில் இப்படித் தலையிட்டுக் கெடுத்தனையே? முழுதும் அவள்வயப் பட்ட நெஞ்சத்தொடு, அவளை என் எதிரிற் கண்டாற்போல் நோக்கி அக்காட்சி இன்பத்தில் யான் ஈடுபட்டிருக்கும் நேரத்தில் நீ எனக்கு இதனை நினைவூட்டி. என் காதலியை ஓவியத்தினளவாய் ஆக்கிவிட்டனையே. (கண்ணீர் உதிர்க்கின்றான்.)

சானுமதி முன்னுக்குப்பின் முரணாயிருக்கின்ற ஒழுக்கத்தொடு கூடின இத்தகைய பிரிவானது புதுமை யுடையதாயிருக்கின்றது.

அரசன்

ஆ தோழா! ஈதென்னை, ஒழிவில்லாத துயரத்திற் படிந்திருக்கின்றேனே?

விழிதுயிலாமையால் விரைக னாவினும் எழிலி னாள்தனை ஏயப் பெற்றிலேன் ஒழுகுகண் ணீரினால் ஓவி யத்தினும் பழியறு பாவையைப் பார்க்க கில்லேனே.

சானுமதி : நீர் தள்ளிவிட்டதனால் சகுந்தலை அம்மை யார்க்கு உண்டான துயரத்தை நீர் இப்போது முற்றும் நீக்கிவிட்டீர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/148&oldid=1577332" இலிருந்து மீள்விக்கப்பட்டது