உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 6.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

மறைமலையம் 6

விதூஷகன் : தோழரே! செவ்வல்லி மலரின் இதழ் போன்ற அழகிய கையினால் தமது முகத்தை மூடிக்கொண்டு இந்த அம்மையார் ஏதோ நடுக்கம் அடைந்தாற்போல் நிற்பது ஏன்? (உற்றுநோக்கி) ஆ! இதோ இந்த வேசிமகனும், பூக்களிலுள்ள தேனைக் கொள்ளையிடுவோனுமான இந்த வண்டல்லவோ அம்மையார் தம் முகத்தாமரையின் மேல் வந்து விழுகின்றான்.

அரசன் : மெய்யே! அக் குறும்பனை ஓட்டிவிடு.

விதூஷகன் : துடுக்கரை ஒறுக்கும் நீர்தாம் அதனை ஓட்டக்கூடும்.

அரக சன் : நல்லதப்படியே, ஏ! பூங்கொடிகளுக்கு அன்பான விருந்தினனே! நீ ஏன் இங்கேவந்து பறக்கும் வருத்தத்தினை எய்துகின்றாய்?

மணமலரில் வேட்கையொடு மகிழ்பேடை வைகிறீ அணவுவது கருதித்தேன் பருகாமை அறியாய்.

சானுமதி : அஃது இப்போது ஒருமுறை நயமாக வெருட்டப்பட்டிருக்கின்றது!

விதூஷகன் : வெருட்டப்பட்டபோதிலும் இந்தச் சாதி முரட்டுத்தனம் உடையதாகவே யிருக்கின்றது.

அரசன் : இங்ஙனஞ் சொல்லியும் நீ எனது கட்டளைக்குக் கீழ்ப்படிகின்றாயில்லை; ஓ வண்டே! இப்போது இதனைக் கேள்: காம வின்பம் நுகருங்காற்

கனிந்து நான்மெல் லெனச்சுவைத்த

தோமில் மரத்திற் கிள்ளாத

தூமென் றுளிரோ மிகப்பழுத்த

காமர் கொவ்வைப் பழமோஎன்

கண்ணே யனையாள் கனிந்தவிதழ்

நீமேற் றொட்டால் முண்டகமா

முகையுட் சிறையாய் நினையிடுவேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/147&oldid=1577324" இலிருந்து மீள்விக்கப்பட்டது