உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 6.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாகுந்தல நாடகம்

115

யிருக்கின்றார். (உரக்க) நண்பரே! இன்னும் வேறு யாது இங்கே எழுதப்படல்வேண்டும்?

சானுமதி : என் றோழியால் விரும்பப்பட்ட அவ்

ங்கள் பலவற்றையும் அவர் எழுத நினைந்திருக்க வேண்டும்.

அரசன் : உற்றுக்கேள்.

துணை புண ரன்னம் மணற்பாங் கிருப்பத்

தண்ணென் றொழுகும் நீர்மா லினியும், அதன்

இருகரை மருங்குங் கௌரியை யீன்ற

இமயம் வைகும் எழிலுடை மான்கள்

அமைதரு தூய பனிதூங் கடுக்கலும், மரவுரி ஞான்ற விரிகிளை மரநிழல் தடக்கலைக் கோட்டில் இடக்கண் டேய்க்கும் விழைவுறு பேடை மானும்

வரைதல் வேண்டினேன் மற்றிது தெரிமோ.

விதூஷகன் : (தனக்குள்) நீண்ட தாடியுள்ள துறவிகளின் கூட்டத்தை இந்த ஓவியப் பலகையில் நிரப்பிவிடப் போகிறார் என்று தெரிகின்றேன்.

அரசன் : நண்பா! மேலுஞ், சகுந்தலைக்குச் செய்ய நினைத்த ஓர் ஒப்பனையை எழுத மறந்துவிட்டோமே!

விதூஷகன் : அஃதென்ன?

சானுமதி : அது, கானக வாழ்க்கைக்கும் அவளது மெல்லிய வடிவத்திற்கும் இசைந்ததாகத் தானிருக்கலாம். அரசன் : தோழா!

காம்புகாது செருகிக் கன்னமேற் றொங்கும் நரம்புடைச் சிரீடம் நான்வரைந் திலெனால்;

மழைநாள் மதியின் தழைகதிர் புரையுந் தாமரை மென்னூல் காமரு கொங்கைகள் நடுவே வயங்க வடிவெழு திலெனே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/146&oldid=1577314" இலிருந்து மீள்விக்கப்பட்டது