சுட்டொலிக் காண்டம்
எ-டு: தடால், தடார் குபீல், குபீர்
மொலோர்,சளார்
iv. தட்டல் (தடை)
99
ஒரு பொருள் இன்னொரு பொருளை முட்டினவுடன், முன்னதன் முற்செலவு தடுக்கப்படுவதால், முட்டற்கருத்தில் தடைக்கருத்துக் தோன்றிற்று.
ஒட்டு-அட்டு-அட்டி = தடை.
அட்டு-அட்டம் = குறுக்கு.
குறுக்கு நிற்பது எதுவும்
எதுவும் தடையாகும். முட்டப்படும் சுவர்
முதலியவும் குறுக்கு நின்றுதான் தடுக்கும். ஆதலால், குறுக்கு நிற்றல் எனினும் தடுத்தல் எனினும் ஒன்றே.
அட்டங்கால் = குறுக்காக மடக்கி வைக்குங் கால்.
=
அட்டு - அட்டணம். அட்டணக்கால் (அட்டணங்கால்) குறுக் காக மடக்கிவைக்குங் கால்.
அட்டப் பல்லக்கு = குறுக்காகக் காவும் பல்லக்கு.
அட்டம் பாரித்தல் = குறுக்காக (பக்கவாட்டில்) வளர்தல்.
குள் - குறு - குறுகு குறுக்கு = வழியின் பக்கவாட்டு, வழித்தடை, முதுகின் குறுக்குப் பகுதி.
குள் - (குட்டு) - கட்டு. கட்டுதல் = தடுத்தல், வழியிற் குறுக்காகச் செல்லுதல்.
66
'காடை கட்டினால் பாடைகட்டும்" என்பது பழமொழி.
துள் – தள் - தட்டு. தட்டுதல் = தடுத்தல். நீருள் மூழ்கினவனுக்குத் தரை தட்டுதலும், முற்செல்பவனுக்குச் சுவர் தட்டுதலும் தடையாகும். தட்டு தட்டி = அறையை அல்லது வழியைத் தடுக்கும் மூங்கிற்பா- அல்லது தென்னங்கிடுகு.
தள் - தளை = தடுக்கும் கட்டு அல்லது விலங்கு, கட்டு அல்லது பிணிப்பு, செ-யுட்சீரின் ஓசைப் பிணிப்பு.
தளைதல் = தடுத்தல், பிணித்தல்.
—
—
தள் - தடு - தடை. தடு தடுப்பு. தடு தடுக்கு = சிறு தட்டி போன்ற
பா-.