உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




100

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

தடு தடக்கு தடங்கு தடங்கல்.

தட்டுத் தொடர்மொழிகள்.

தடையின்றி,

தட்டுத் தடங்கலின்றி என்பன மரபுத்

தள் - (தழு) - (தகு) - தகை. தகைத்தல் = தடுத்தல்.

முள் - முட்டு = முட்டுப்பாடு, தடை.

தீயதைக் காண்டலும் கேட்டலும் நல்வினைக்குத் தடையாகக் கருதுதலின், அவற்றை முறையே. கண்டுமுட்டு கேட்டுமுட்டு என்பர் சமணர்.

முள் - (முடு) - முடை = நெருக்கடி, முடை முடைஞ்சல்.

முட்டு -(முட்டம்) - விட்டம் = முகட்டின் குறுக்குத் தரம்.

-

முள் - (முறு) - மறு மறுக்கு = குறுக்கு. மறுக்காட்டுதல் = குறுக்காக நின்று இடம் வலம் செல்லாதபடி தடுத்தல். குறுக்கும் மறுக்கும் என்பது வழக்கு.

முல் வில் விலகு விலங்கு = குறுக்கு. குறுக்காக வளர்வது, தடுக்குங் கட்டு (தளை).

"விலங்கூ டறுத்தது’

-

(சிலப். 16:213)

வில் வில்லடை = தடை. விலங்கு விலங்கம் வில்லங்கம் = தடை.

விலங்கு விலங்கல் = நாட்டின் குறுக்கே நின்று ஒன்றன்

செலவைத் தடுக்கும் மலை.

"குன்று முட்டிய குரீஇப் போல" என்னும் உவமையை நோக்குக.

ஒருவன் ஓர் அறியாத நாட்டில் சென்றுகொண்டிருக்கும்போது, வழியில் மலையிருப்பின், தடையுண்டு சுற்றிச் செல்வது அல்லது மீள்வது இயற்கை. கரிகால் வளவனின் வடதிசைப் படையெடுப்பு பனிமலையால் தடையுண்டது.

V. கடை

ஒன்று இன்னொன்றை முட்டும் முனை அதன் கடையாதலால், முட்டற்கருத்தில் கடைமைக் கருத்துத் தோன்றிற்று.

பக்கம் நோக்கியதும் மேனோக்கியதும் எனக் கடை இருவகை. பக்கம் நோக்கியது முனை அல்லது கடை; மேனோக்கியது உச்சி. தலை என்பது இவ் விரண்டிற்கும் பொது.