உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டொலிக் காண்டம்

101

முன்பு மேற்செலவியலிற் கூறப்பட்ட உச்சிமைக் கருத்தும், இங்குக் கூறப்பட்ட கடைமைக் கருத்தும் ஒன்றே. ஆயினும், 'ஒப்பின் முடித்தல்' என்னும் உத்திபற்றி, மேனோக்கிய உயர்ச்சி குறித்த சொற்களுடன் மேனோக்கிய உச்சி குறித்த சொற்களும் கூறப்பட்டன. எனினும், நட்டுக்கு நிற்கும் நிலைத்திணைப் பொருள்களின் உச்சிப் பெயர்கள் உயர்தற் கருத்தையும் படுக்கையா-க் கிடக்கும் நிலைத் திணைப் பொருள்களின் கடைப்பெயர்கள் முட்டற்கருத்தையும், இருநிலையும் அடையக்கூடிய இயங்குதிணைப் பொருள்களின் உச்சிப் பெயர்கள் அவ் இரு கருத்தையும், அடிப்படையா-க் கொண் டவை யென்றறிக.

படுக்கையா-க் கிடக்கும் ஒரு தூணின் முனை, அது நட்டுக்கு நிற்கும்போது உச்சியா- மாறுதல் காண்க.

குடு குடுமி = முடி, முடிபு (தீர்மானமான கொள்கை).

"கொண்ட குடுமித்தித் தண்பணை நாடே”

(புறம்.32)

குடு -(கடு) கடை - கடைசி. கடையன் =

நாற்பால் வரிசையில்

குடு கொடு கோடி = கடைசி.

இறுதியில் கூறப்படும் உழவன். கடைச்சி - கடைசி = கடைசி = உழத்தி.

துல் - (தல்) தலை = கடை, உச்சி, மேலுறுப்பு.

இருதலை மணியன், இருதலைக் கொள்ளி, இருதலைக் காமம் முதலிய தொடர்களில், தலை என்பது முனையை அல்லது கடையைக் குறித்தல் காண்க.

"நடுவண தெ-த இருதலையும் எ-தும்

என்பதிலும் அஃதே.

29

மூண்டு = தலை. முடி = தலை, உச்சி, உச்சிக் கொண்டை, தலைமயிர்.

-

-

-

முடி,

முள் முழு முகு முகுடம் = முடி. முகுடம் மகுடம் = 14044, முடிக்கலம், பாட்டின் இறுதித் தொடர்.

முச்சி = தலையுச்சி. மோசிகை = உச்சிமுடி.

முஞ்சம் = உச்சியணி.