உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




102

vi. எல்லை

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

முட்டுங்கடை ஒரு பொருளின் முடிவிடமா- அல்லது எல்லையா யிருப்பதால், முட்டற்கருத்தில் எல்லைக் கருத்துத் தோன்றிற்று.

உல் - உல, உலப்பு = முடிவு, அளவு, எல்லை.

உல் - ஒல் = எல்லை, முடிவு.

ஒல் எல் எல்லை. எல் - எல்கை.

எல் - ஏல் - ஏல்வை = காலவெல்லை.

-

ஓர் ஓரம் = முடியும் பக்கம், பக்கம்.

ஓரஞ்சொல்லுதல் = ஒருபாற் கோடிச் சொல்லுதல்.

குடு கொடு கோடி = கடைசி, எல்லை. கடைகோடி, தெருக் கோடி என்னும் வழக்குகளைக் காண்க.

துகு - (திகு) - திகை = முடிவு, எல்லை. திகைதல் = முடிதல், தீர்தல், தீர்மானமாதல். 'மாதம் திகைந்த சூலி,' 'அதன் 'அதன் விலை விலை இன்னும் திகையவில்லை’, என்பது தென்னாட்டு வழக்கு.

திகை திசை = முடிவு, எல்லை, பக்கம். (துக்கு) - திக்கு.

திசைச்சொல் = பல திசைகளில் வழங்கும் கொடுந்தமிழ்ச்சொல்.

திசைச்சொல் என்பது தொன்றுதொட்டு வழங்கி வரும் தமிழிலக்கணக் குறியீடாதலாலும், மயங்குதலைக் குறிக்கும் திகை என்னும் சொல்லும் திசை என்று திரிதலாலும், எல்லையைக் குறிக்கும் திசை என்னும் சொல் தென்சொல்லேயாம்.

"நீ திசைத்ததுண்டோ"

(கம்பரா. கைகேசி சூழ். 18)

"இவன் சிந்தைதுழா-த் திசைக்கின்றதே" (திவ். திருவா-. 4: 6:1)

"திசைப்புறுதலுஞ் சீவர்க்கு"

(வேதா. சூடா.110)

என்னுந் தொடர்களில், மயங்குதலைக் குறிக்கும் திகை என்னுஞ் சொல் திசை என்று திரிந்திருத்தல் காண்க. திசை என்னுஞ் சொல்லின் மூலவடிவான திகை என்பது வடமொழியில் வழங்காமையையும் நோக்குக.

திசை - (தேசு) - தேசம் - தேயம் - தேம் திசை = தேசம், பக்கம், இடம்.

"அவன்மறை தேஎ நோக்கி"

(அகம். 48)