சாகுந்தல நாடகம்
65
பெற்ற கணையாழியைச் சகுந்தலையின் விரலில் தாமே பொருத்திவிட்டுப் போனார்; அதனாற் சகுந்தலை அவ் வசை தீர்க்கும் மருந்தைத் தன்னிடத்தே வைத்திருக்கின்றாள்.
அனசூயை : இதற்கிடையில் அவளுக்காகக் காவற் றெய்வத்தை வழிபடுதற்குப் போவம், வா.
(இருவருஞ் சுற்றிப் போகின்றனர்)
பிரியம்வதை : (பார்த்து) ஏடி அனசூயே! இதோ பார்! தன் இ துகையில் முகத்தை வைத்தவண்ணமாயிருக்கும் நம் அன்பிற்கினிய தோழி ஓவியத்தில் எழுதிய உருவம்போற் காணப்படுகின்றாள். தன் கணவனை நினைந்திருக்கும் ஆழ்ந்த நினைவில் தன்னையே மறந்திருக்குமிவள், ஒரு விருந்தினரை மறக்கக் கேட்பானேன்?
அனசூயை : பிரியம்வதை! இங்கே நிகழ்ந்த இது நம் இருவர்வாய்மட்டிலிருக்கட்டும்; நம் காதற்றோழி இயற்கை யிலே மிக மெல்லியளாதலால், இதனைக் கேட்டுத் திடுக் கிடாமற் பாதுகாத்தல் வேண்டும்.
பிரியம்வதை : புதுமல்லிகைக் கொடிமேல் யார்தாம் வெந்நீரைத் தெளிப்பர்? (இருவரும் போய்விடுகின்றனர்.)
இடையுரை முடிந்தது.
(உறக்கம்நீங்கி எழுந்த மாணாக்கன் ஒருவன் வருகின்றான்.)
மாணாக்கன் ஊருலிருந்து திரும்பி வந்திருக்கும்
மாட்சிமை தங்கிய காசியபர் நாழிகை
வ்வளவென்று
பார்த்து வரும்படி எனக்குக் கட்டளையிட்டிருக்கின்றனர். ப்போது நான் வெளியே சென்று இன்னும் இராப் பொழுது கழிய எத்தனை நேரஞ் செல்லுமென்று
6
காண்பேன். (சுற்றிப்போய்ப் பார்க்கின்றான்.) ஓ! விடியற்கால மாயிற்றே ! ஏனெனில்,
இலைகிளர் பூண்டுக்குத் தலைவ னாகிய சுடரொளி மதியங் குடபால் வரையின்