உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 6.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

மறைமலையம் 6

ஒருபுறஞ் செல்லா நிற்ப, ஒருபுறம்

வைகறை யென்னுங் கைவல் பாகனை முன்செல விடுத்துப் பொன்போன் ஞாயிறு கீழ்பா யெல்லையிற் கிளரு மன்றே,

ஒருகா லீரிடத் தீரொளிப் பிண்டந் தோன்றலும் மறைதலும் ஆன்றறியுங்கால் மண்ணோர் வாழ்க்கையி லின்னலு மின்பமும் மாறி மாறி வீறுதல் பெறுமே,

செழுமதி யென்னுங் கொழுநனை யிழந்து முதிரெழில் போன ஆம்பல் எதிர்விழிக்கு இன்பம் பயவா இயல்புணர் விடத்து ஈங்கு ஆருயிர்க் காதலர்ப் பிரிந்த வாரிருங்

கூந்தன் மடவார் எய்துஞ்

சாந்துயர் பொறுத்தற் கரிதெனப் படுமே.

(திரையைச் சடுதியில் விலக்கிக்கொண்டு அனசூயை

வருகின்றாள்.)

அனசூயை : சிற்றின்ப நுகர்ச்சியில் நமக்குப் பழக்க மில்லாவிட்டாலும், அரசன் தன் தலைமைத்தன்மைக்கு அடாதவாறாய்ச் சகுந்தலையினிடத்து நடந்துகொண்டா னென்பது முன்னமே நம்மால் அஞ்சப்படவில்லையா?

மாணாக்கன் : காலைவேள்வி செய்யவேண்டுங் காலம் வந்துவிட்டதென்ற யான் இப்போது குருவினிடஞ் சென்று தெரிவிக்கின்றேன்.

அனசூயை : உறக்கம் நீங்கி எழுந்தும் நான் என் செய்வேன்? நான் எப்போதுஞ் செய்யவேண்டிய கடன்களைச் செய்தற்கும் என் கைகால்கள் முன்செல்ல வில்லை. இரண்டகஞ் செய்த கயவனான ஒருவனுக்குப் பேதையளான எங்கள் தோழி தன்னைக்கொடுத்துவிடும்படி செய்த காமவேள் இப்போதாவது மனம் நிறைந்திருக்கட்டும். அல்லது துருவாசருடை சீற்றந்தான் இத் தன்மையதான தீங்கினை விளைவித்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/97&oldid=1577156" இலிருந்து மீள்விக்கப்பட்டது