உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 6.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாகுந்தல நாடகம்

67

வருகின்றதோ! அப்படியில்லாவிட்டால் அத்தகைய உறுதி மொழிகள் புகன்ற அவ் அரசமுனிவர் பின் இத்தனை காலமாக ஒரு திருமுகமாயினும் எழுதாமல் இருப்பரா? ஆகையால், நினைவுகூர்தற்கு அடையாளமான இக்கணையாழியையே அவர்க்கு நாம் அனுப்பலாம்; ஆனால், வருத்தமான தவவொழுக்கத்தில் வாழுந் துறவோரில் யாரை இது செய்யும்படி வேண்டிக்கொள்ளலாம்? நம் தோழியி னிடத்திலேதான் குற்றமிருக்கின்றது; ஆனதனாலே தான் ஊரிலிருந்து வந்த தந்தை காசியபருக்குச் சகுந்தலை துஷியந்த அரசனை யாழோர் மணஞ் செய்துகொண்டா ளென்றும், ப்போது கருக்கொண்டிருக்கின்றா ளென்றுஞ் சொல்வதற்கு என்மனம் ஒருப்பட்டாலும் என் நாவானது எழவில்லை. வ்வாறாயின், வேறு நாம் யாது செய்யலாம்?

(பிரியம்வதை வருகின்றாள்.)

பிரியம்வதை : (மகிழ்ச்சியோடு) தோழி! சுருக்க வா! சுருக்க வா! சகுந்தலையைக் கணவனிடம் அனுப்புதற்கு மங்களக் கடன்கள் செய்யவேண்டும்.

அனசூயை : தோழி! இஃதெப்படி நிகழ்ந்தது?

பிரியம்வதை : கேள். நன்றாய் உறங்கினளா வென்று கேட்கச் சகுந்தலையினிடம் இப்போதுதான் சென்றேன்.

அனசூயை : அப்புறம் யாது?

பிரியம்வதை : அப்போது தான் சகுந்தலை நாணத்தினாற் றலைகவிழ்ந்துகொண்டிருப்ப, அவளை அப்பா காசியபர் தழுவிக் கொண்டு பின்வருமாறு வாழ்த்துரை கூறுவாராயினர்; "வேள்வி வேட்குமவன் கண்கள் புகையால் மறைக்கப்படினும், அவனிடும் பலியானது நல்வினை வயத்தால் நெருப்பில் நேரே விழுந்தது; என்னருமைக் குழந்தாய்! தகுதியுள்ள மாணக்கனுக்குக் கற்றுக்கொடுத்த கல்வி போல நீயும் எனக்குக் கவலை தராதவளானாய்; இன்றைக்கே துறவிகளைத் துணையாகக் கூட்டி நின்னை நின் கணவனிடம் போக விடுகின்றேன்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/98&oldid=1577157" இலிருந்து மீள்விக்கப்பட்டது