உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 6.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

மறைமலையம் -6

அனசூயை : அப்பா காசியபருக்கு இச் செய்தி யாரால் தெரிவிக்கப்பட்டது?

பிரியம்வதை : அவர் வேள்விச் சாலையிற் புகுந்த பொழுது செய்யுள் உருவாய் வானில் உண்டான ஓர் ஒலியால்.

அனசூயை : (வியப்படைந்து) அதனைச் சொல்.

பிரியம்வதை : (பிராகிருதத்திலன்றித் திருத்தமான சமஸ்கிருதத்தில்)

முன்னுக தவமுதிர் முனிவ! நின்மகள்

வன்னிமா மரந்தனுள் வளர்தி வைத்தல்போல்

இந்நிலம் நலம்பெறத் துடியந் தன்னிட்ட

பொன்னுயிர் அகட்டினிற் பொலியக் கொண்டனள்.

அனசூயை : (பிரியம்வதையைத் தழுவிக்கொண்டு தோழி! நான் மிக மகிழ்ந்தேன்! ஆனால், இன்றைக்கே சகுந்தலை போகின்றான் என்பதை நினைக்கையில், அம் மகிழ்ச்சியொடு துயரமு முண்டாகின்றதே!

பிரியம்வதை : தோழி! நம்முடைய துயரத்தை எப்படியாவது நீக்கிக் கொள்வோம்; பேதையான அவள் எப்படியாவது இன்ப மெய்தட்டும்.

அனசூயை : நல்லது, இதனை எண்ணித்தான் சில நாளாயினும் வாடாமற் பச்சென் றிருக்கத்தக்க மகிழ மாலையை, அதோ மாமரக்கிளையில் தொங்கவிட் டிருக்குந் தென்னோலையால் முடைந்த கூடையில் வைத்திருக் கின்றேன். நீ அதனை எடுத்துவா ; இதற்கிடையில் நானுங் கோராசனை, தீர்த்தமண், மெல்லறுகம்புல் முதலிய மங்கள மணக்கூட்டுத் திரட்டுகின்றேன்.

பிரியம்வதை : நல்லது, அப்படியே செய்.

(அனசூயை போய் விடுகின்றாள், பிரியம்வதை பூங்கூடையை எடுத்து வருகின்றாள்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/99&oldid=1577158" இலிருந்து மீள்விக்கப்பட்டது