152
மறைமலையம் 6
கூறப்படும் றைவன் தக்கன் வேள்வியழித்த கதை'யில் இவ்வாறு நுவலப்படுகின்றது. தக்கன் ஆற்றிய வேள்வி சிவபிரானால் அழிப்புண்டு ஒரு மான் வடிவுகொண்டு ஓடாநிற்கச், சிவபிரான் பினாக மென்னும் வில்லையேந்தி அதனை வானின்கட் டொடர்ந்து சென்றார் என்பது.
கட்புலனாதல்
கடித்தல்.
-
கண்ணுக்குத் தெரிதல். கறித்தல்
(பக் - 5) கடுஞ் செலவு - விரைந்த ஓட்டம்.
-
மட்டம் சமம். கவரி - சாமரை. படவம் - படல்,
மூடி,
வ
(பக் - 6) இலக்கு - குறி. துறவிகள் - முனிவர்கள்.
மாணவர் - சீடர், மலர் - பூ. ஊடுருவல் - நடுநுழைதல்.
‘புரு' என்பவன் மதி (சந்திர) குலத்திற்குத் தலைவன்; அத்திரி முனிவரின் புதல்வனான சந்திரன் என்பான் இக்குலத்தைத் தோற்றுவித்தமையின் இஃது அவன் பெயரால் வழங்குவதாயிற்று. சந்திரன் அல்லது சோமன் கால்வழியில் வந்தோர்: புதன், புரூரவன், ஆயு, நகுஷன், யயாதி என்போராவர்; இவருட் 'புரு'வின் கால்வழியில் வந்தோர்: தம்சு, அநிலன், துஷியந்தன், பரதன் என்போராவர். இங்ஙனமே, பகலவன் அல்லது வைவஸ்வத குலத்திற்குத் தலைவன் ‘இக்குவாகு' என்பவனே யாவன்; அவன் வழியில் வந்தோர்; ககுத்தன், திலீபன்,ரகு முதலியோராவர்.
66
(பக். 7) அந்தணர் - அருளொழுக்கம் வாய்ந்த துறவோர்; அந்தணர் என்போர் அறவோர்மறறெவ்வுயிர்க்குஞ், செந்தண்மை பூண்டொழுக லான்” என்றார் தெய்வப் புலமைத் திருவள்ளுவரும். ஏற்கற்பாற்று - ஒப்புக் கொள்ளுதற்கு உரியது.
என்பது
கொணர்தல்-கொண்டுவருதல். மாலினி அத்தினாபுரத்திற்கு அருகிற் கங்கையாற்றில் வந்து கலக்கும் ஒரு கிளையாறு; இது 'மந்தாகினி' எனவும் பெயர்பெறா நிற்கும்.
-
இடர் - துன்பம். நோன்பு தவம். மாதவர் - பெருந்தவத் தோர். தழும்பு வடு.
-