உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாண்டியர் வரலாறு

113

இராமநாதபுரம் ஜில்லாவிலுள்ள கேரள சிங்கவளநாடும் வாணாதிராயன் என்ற தலைவன் ஒருவன் கண்காணிப்பில் அமைந்திருந்தமை அறியத் தக்கது.'

பாண்டி வேந்தரிடம் படைத்தலைவர்களாக நிலவிய வ்வாணாதிராயர்கள் அன்னோர் அயலார் படையெழுச்சி யினால் ஆற்றலிழந்து இன்னல் எய்திய காலத்தில் பாண்டி நாட்டில் தாம் சுயேச்சையாகத் தனியரசு புரியத் தொடங் கியமையோடு பாண்டியர் திருநெல்வேலி ஜில்லாவிற்குச் சென்று அங்குக் குறுநிலமன்னர் நிலையில் இருந்து வருமாறு செய்தும் விட்டனர். எனவே, பாண்டியர் பேரரசின் வீழ்ச்சிக்கு இம்மாவலி வாணராயர்களின் அடாத செயலே காரணமாகும்.

இனி, குலசேகர பாண்டியற்குச் சுந்தர பாண்டியன் வீரபாண்டியன் என்ற புதல்வர் இருவர் இருந்தனர். அவர்களுள் சுந்தரபாண்டியன் பட்டத்தரசியின் மகன்; வீரபாண்டியன் வேறு மனைவியின் புதல்வன். அவ்விருவருள் வீரபாண்டியன் ஆண்மையும் வீரமுடையவனாயிருந்தனன். தனக்குப் பிறகு பாண்டிய இராச்சியத்தை நன்கு பாதுகாத்து ஆட்சி புரியவல்லவன். வீரபாண்டியனே என்று கருதிக் குலசேகர பாண்டியன் அவனுக்கு கி.பி. 1296-ல் இளவரசுப் பட்டங் கட்டினான். 'சுந்தரபாண்டியன் தன் தந்தையின் செயலை வெறுத்து, கி.பி.1310-ஆம் ஆண்டில் அவனைக் கொன்று சில வீரர்களின் துணைகொண்டு மதுரைமா நகரில் அரியணை ஏறினான். இளவரசனாயிருந்த வீரபாண்டியன் தலைநகரை விட்டு ஓடிவிட்டான். குலசேகர பாண்டியன் தன் மகனால் கொல்லப்பட்ட செய்தி, கல்வெட்டுக்களில் காணப்பட வில்லை. மகமதிய மதிய ஆசிரியனாகிய 'வாசப்' என்பவன் வரைந்துள்ள குறிப்பால் அறியப்படுகின்றது.

3

1. The Pandyan Kingdom p. 187.

2. Ins. 430 of 1921.

3. Wassaf in Elliot and Dowson. Vol. III. pp. 53 and 54.