(இ-ரை.) சொல்லுதல் யார்க்கும் எளிய - ஒரு வினையை இன்ன கருவியால் இன்னவாறு செ-து முடிக்கலாம் என்று வழி சொல்லுவது எவருக்கும் எளிதாம்; சொல்லிய வண்ணம் செயல் அரிய ஆம் - ஆனால், சொன்னவாறு அதைச் செ-து முடிப்பது பெரும்பாலார்க்கு அரிதாம்.
சொல்லுதலும் செ-தலும் சொல்வார் செ-வார் பன்மைபற்றிப் பன்மையாகிப் பன்மைவினை கொண்டன. ஏற்புழிக்கோடல் என்னும் உத்தியால், அரிது என்பது ஒருசிலர் அரும்பாடு பட்டுச் செ-து முடித்தலையும், பெரும்பாலோர் எப்பாடு பட்டும் செ-ய முடியாமையையும் உணர்த்தும் என்று கொள்ளப்பெறும். இனி, எதிர்நிலையளவை (அருத்தாபத்தி)யால், ஒரோ ஒருவர்க்கு அது எளிதாக முடியும் என்பதும் அறியப்படும்.
665. வீறெ-தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்க
ணூறெ-தி யுள்ளப் படும்.
(இ-ரை.) வீறு எ-தி மாண்டர் வினைத்திட்பம் – சூழ்வினையால் மேம்பட்டுப் பிற விலக்கணங்களாலும் மாட்சிமைப்பட்ட அமைச்சரின் வினைத்திண்மை; வேந்தன்கண் ஊறு எ-தி உள்ளப்படும் - பயனளவில் அரசனை யடைதலால் அவனாலும் பிறராலும் மதிப்பொடு கருதப்பெறும்.
பிற விலக்கணங்கள் 64ஆம் அதிகாரத்தில் முதல் ஆறு குறள்களிலுஞ் சொல்லப்பட்டனவாம். 'வேந்தன்க ணூறெ-தல்' வினைத்திட்பத்தால் விளைந்த செல்வமும் புகழும் அரசனை யடைதல். ஊறெ-தல் உறுதல். உறுவது ஊறு. உறுதல் அடைதல்.
666. எண்ணிய வெண்ணியாங் கெ-துப வெண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்.
(இ-ரை) எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின் - பொருள்களைப் பெற எண்ணியவர் அவற்றைப் பெறுவதற்கு வழியாகிய வினையில் திண்மை யுள்ளவராக இருப்பாராயின்; எண்ணிய எண்ணிய ஆங்கு எ-துப - தாம் பெற எண்ணிய பொருள்களை யெல்லாம் தாம் எண்ணியவாறே பெறுவர்.
கருதிய பொருள்களை யெல்லாம் எளிதிற் பெறுவரென்பார் 'எண்ணிய எண்ணியாங் கெ-துப' என்றார். அமைச்சரின் சூழ்வினை போன்றே செ- வினையும் திண்ணியதா யிருப்பின், அவர் கருதிய பொருள் பெறுதல் எளிதென்பதாம். மந்திரம் மன்னும் திறம். மன்னுதல் எண்ணுதல். முன்(னு)-மன்(னு).