உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

திருக்குறள்

தமிழ் மரபுரை


இனி, இக் குறட்கு "யாதானும் ஒரு வினை செ-யும் இடத்து அதற்கு இடையூறு வருவதும் வந்துற்றதுமா- இருக்கும். அவற்றுள் வருவதாகிய இடையூறு முன்கோலிக் கழியுமாறு செ-தலும், அது அன்றி ஒன்று உற்ற தாயின் அதற்கு மனம் தளராமையும் அவ் விரண்டினது நெறி என்று சொல்லுப, ஆரா-ந்து அமைந்த அமைச்சரானோர் வினையினது கோட்பாட் டினை என்றவாறு" என்னும் காளிங்கர் உரையும் பொருந்துவதேயாம்.

663. கடைக்கொட்கச் செ-தக்க தாண்மை யிடைக்கொட்கி
னெற்றா விழுமந் தரும்.

(இ-ரை.) கடைக் கொட்கச் செ-தக்கது ஆண்மை – மறைத்துச் செ-ய வேண்டிய வினைகளை முடிந்த பின்னரே வெளிப்படுமாறு கமுக்கமா-ச் செ-வதே வினைத்திட்பமாம்; இடைக் கொட்கின் எற்றா விழுமம் தரும் – அங்ஙனமன்றி அத்தகைய மருமவினைகள் இடையில் வெளிப்படுமாயின், நீக்க முடியாத் துன்பந் தருவனவாம்.

"மறைவாகச் செ-ய வேண்டியவை படையெடுப்பிற்கு வட்டங் கூட்டுதல் (ஆயத்தஞ் செ-தல்), பெரியாரைத் துணைக்கோடல். வல்லரசனொடு மணவுறவு கொள்ளுதல், பெரும் புதையலைக் கைப்பற்றுதல் முதலியன. மறைவு வெளிப்படும் வகைகள், செயலும் சொல்லும் உடையும் வடிவும் குறிப்பும் பொருளும் கருவியும் பிறவுமாம். வினைத்திட்பம் ஆண்மைக் குணமாதலின் ஆண்மையெனப்பட்டது. "ஒருவரறிந்தது உலகறிந்தது.' ஆதலின், இயன்றவரை பிறருக்குத் தெரியாது வினை முடித்தல் வேண்டு மென்பதும், தெரியின் பின்பு ஒருகாலும் திருத்த முடியாவாறு பகைவர் தடுப்பால் வினை கெட்டுவிடு மென்பதும், அதனாற் பெருந்துன்பம் விளையு மென்பதும் உணர்த்தற்கு 'இடைக்கொட்கின் எற்றா விழுமந் தரும்' என்றார்.

எடுத்த வினையை இறுதிவரை செ-து முடிப்பதே ஆண்மையென்றும், இடையில் விட்டுவிடுவது பெருந்துன்பம் தரும் என்றும், மணக்குடவரும் பரிப்பெருமாளும் பரிதியாரும் காலிங்கரும் உரைத்திருப்பது சிறந்ததன்று. 'கடைக்கொட்பின்' என்பது காலிங்கர் பாடம். இவருள் முன்னிருவரும் வெளிப்படையாகவும் பின்னிருவரும் குறிப்பாகவும், கொட்குதல் என்னும் வினைக்குச் சுழலுதல் என்று பொருள் கொண்டனர்.

664. சொல்லுதல் யார்க்கு மெளிய வரியவாஞ்
சொல்லிய வண்ணஞ் செயல்.