661. வினைத்திட்ப மென்ப தொருவன் மனத்திட்ப
மற்றைய வெல்லாம் பிற.
(இ-ரை.) வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் - வினை செ-வதில் திண்மை என்பது அதைச் செ-பவனின் மனத்திண்மையே; மற்றைய எல்லாம் பிற – அஃதல்லாத பிறவெல்லாம் அதைப்போன்ற திண்மையாகா.
மற்றைப் பிறவாவன: குடி, படை, அரண், நட்பு என்பவற்றின் திண்மைகள். அவையும் வேண்டுமாயினும், செ-வானின் மனத்திண்மை யில்லா விடத்து அவை பயன்படாவாதலின் 'மற்றைய வெல்லாம் பிற' என்றார்.
662. ஊறொரா லுற்றபி னொல்காமை யிவ்விரண்டி
னாறென்ப ரா-ந்தவர் கோள்.
(இ-ரை.) ஆ-ந்தவர் கோள் – வினைத்திட்பத்தை ஆரா-ந்தறிந்த அமைச்சருடைய கொள்கை; ஊறு ஒரால் உற்றபின் ஒல்காமை இவ் விரண் டின் ஆறு - கேடு தரக்கூடிய வினைகளைச் செ-யாமையும் வினை செ- யுங்கால் தெ-வத்தால் நேர்ந்த இடையூற்றிற்குத் தளராமையும் ஆகிய இவ் விரண்டின் வழி; என்ப - என்று கூறுவர் அரசியல் நூலார்.
வினைத்திட்பம் என்பது அதிகாரத்தால் வந்தது. அமைச்சியலை உள்ளடக்கும் நூல் அரசியல் நூல் அல்லது பொருள் நூலாகவே யிருக்க முடியும். முப்பால் நூலாகிய இத் திருக்குறள் அரசியலையும் அமைச்சியலையும் பொருட்பாலில் தழுவினும், அரசியலை அல்லது பொருளியலை மட்டுங் கூறும் தனிநூல்போல் விரிவாக இருத்தல் இயலாததே. சாணக்கியனாரின் வடமொழிப் பொருள்நூலுக்கு மூலமாக விருந்த பண்டைத் தமிழ்ப் பொருள் நூல்களெல்லாம் "வாரணங் கொண்ட தந்தோ வழிவழிப் பெயரும் மாள" என்பதினும் ஆரியம் அழித்ததந்தோ அவற்றொடு பெயரும் மாள என்பதே உண்மையானதாம். ஒருவல் என்பது ஒரால் என நின்றது.
திருவள்ளுவர் தமிழ்மரபின்படியே தம் நூலைச் செ-திருப்பதால், 'ஆ-ந்தவர் கோள்' என்பதற்கு "முன் நீதியாரா-ந்த அமைச்சரது துணிபு" என்றும்; "தேவர்க்கும் அசுரர்க்கும் அமைச்சுப்பூண்ட வியாழ வெள்ளிகளது துணிபு தொகுத்துப்பின் நீதிநூலூடையார் கூறியவாறு கூறுகின்றமையின் ஈண்டு வினைத்தூ-மையும் உடன் கூறினார்" என்றும்; பரிமேலழகர் கூறியிருப்பது பொருந்தா தென்க. ஆ-ந்தவர் கொள்கை இவ் விரண்டின் வழி என்பதை, இவ் விரண்டும் ஆ-ந்தவர் கொள்கை என்பதாகவே கொள்க.