உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிளையாடல் கதைகள்

12. உக்கிர குமாரனுக்கு வேல் வளை செண்டு வழங்கியது

153

மணவூரைத் தலைநகராகக் கொண்டு அந்நாளில் ஆட்சி செய்த பாண்டியன் சோம சேகர் என்பவன். அவனுக்கு ஒரு மகள் இருந்தாள். அவள் காந்திமதி என்பவள். அவள் உயர்ந்த பண்பு நலங்களும் அழகும் வாய்ந்தவள்.

சோம சேகர் கனவில் இறைவன் தோன்றினான். மதுரையில் அவன் மகளுக்குத் தக்க மணவாளன் இருப்பதை உணர்த்தினான். அதனை உணர்ந்த சோம சேகர் மதுரைக்கு வந்து உக்கிர குமாரனைக் கண்டு மணவுறுதி செய்தான். குறித்த நாளில் உக்கிர குமாரனுக்கும் காந்திமதிக்கும் சிறப்பாகத் திருமணம் நிகழ்ந்தது.

பின்னர் ஒரு நாள் இறைவனாகிய சுந்தர பாண்டியன் தன் மகனை அழைத்து, "இந்திரனும் கடலரசனும் உனக்கு என்றும் பகையாக இருப்பவர். மேருமலையோ செருக்குடையது. ஆதலால் அவர்களை வெல்வதற்காகவும், செருக்கை அடக்குவதற்கா காகவும் வேலை, வளை, செண்டு ஆகிய இவற்றைக் கொள்க" என்று வழங்கினான். அவனுக்கு முடிசூட்டு விழாவும் நடத்தித் தானும் தடாதகையும் கோயிலுள் சென்று திருவுரு மறைந்தனர்.

13. கடல் சுவற வேல்விட்டது

96

உக்கிரகுமார பாண்டியன் குதிரை வேள்விகள் செய்தான். அதனைக் கண்டு அஞ்சிய இந்திரன், வருணனை வேண்டிக் கடல்கள் பெருக்கெடுத்து மதுரையை அழிக்குமாறு கட்டளையிட்டான். நள்ளிரவிற் கடல் பெருக்கெடுத்து மதுரையை அழிக்கும் ஊழிக்கடல் போல் வந்தது. மக்கள் அஞ்சி அலறினர்.

உக்கிர பாண்டியன் கனவில் இறைவன் தோன்றிக் கடற் பெருக்கை உணர்த்தினான். உணர்ந்த பாண்டியன் வெள்ளத்தைக் கண்டு திகைத்தான். அப்பொழுது ஒரு சித்தர் வடிவில் தோன்றிய

றைவன் பாண்டியனிடம் "வேற்படையை எடுத்துக் கடற் பெருக்கின் மேல் ஏறி" எனக் கட்டளையிட்டான். அவ்வாறே பாண்டியன் வேலை ஏவிய அளவில் அப்பெருக்கு வற்றி வறண்டது.

14. இந்திரன் முடிமேல் வளை எறிந்தது

சோழ

உக்கிரகுமார பாண்டியன் ஆட்சி செய்த காலத்தில் சேர பாண்டிய நாடுகளாகிய தமிழ்நாடு முழுவதும்