உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

இளங்குமரனார் தமிழ்வளம் -31 ஓ

மழையின்றித் தவித்தது. மூவேந்தரும் அகத்திய முனிவரை அணுகி முறையிட்டனர். அவர் இந்திரனைக் கண்டு வேண்டுமாறு வழியுரைத்தார். மூவேந்தரும் விண்ணுலகம் சென்று இந்திரனை நெருங்கினர். அவன் மூவேந்தருக்கும் தன் இருக்கையிலும் உயரம் தாழ்ந்த இருக்கைகளைத் தந்தான். சேரனும் சோழனும் அவ்விருக்கைகளில் அமர்ந்தாராகவும் பாண்டியன் மட்டும் அவ்விருக்கையில் அமராமல் இந்திரன் இருக்கையில் அவனுக்கு ணையாக அமர்ந்தான். அதனைக் கண்டு சீற்றங்கொண்ட இந்திரன் சேர சோழ நாடுகளில் மழை பெய்யவும் பாண்டிய நாட்டில் மழை இல்லாதொழியவும் செய்தான்.

ஒருநாள் உக்கிரகுமாரன் பொதியமலைக்கு வேட்டையாடச் சென்றான். இந்திரனின் ஏழு மேகங்களில் நான்கு அங்குக் கூடியிருந்தன. அவற்றைச் சிறையிட்டுப் போகவிடாது செய்தான். இதனால் இந்திரனுக்கும் உக்கிரகுமாரனுக்கும் பெரும் போர் மூண்டது. அப்பொழுது உக்கிரன் ஏவிய வளை, இந்திரன் வச்சிரப்படையை

அழித்ததுடன் அவன் முடியையும்

வீழ்த்தியது. தோல்வியுற்ற இந்திரன் பாண்டிய நாட்டில் மழைபொழிய இசைந்தான். உக்கிரகுமாரன் மேகங்களைச் சிறை விடுத்தான்.

15.மேருவைச் செண்டால் அடித்தது

மீண்டும் ஒருமுறை பாண்டியநாடு மழையின்றி வறண்டது. மக்கள் வறுமையுற்றனர். உக்கிர குமார பாண்டியன் நாட்டு நிலைமையைக் கூறி இறைவனிடம் முறையிட்டான்.பாண்டியன் கனவில் தோன்றிய இறைவன், "மேருமலைக் குகையில் மிகுந்த பொருள்கள் உள்ளன; மேருவின் செருக்கை அடக்கி அவற்றைப் பெற்றுக் கொண்டு குகையை அடையாளமிட்டு மூடிவிடு" எனக்

கட்ளையிட்டான்.

இறைவன் ஆணைப்படி மேருவுக்குச் சென்ற உக்கிர பாண்டியன் மலையரசனை அழைத்தான். அவன் தன் செருக்கால் வராதிருந்தான். உக்கிரகுமாரன் செண்டால் மேருவை அடித்தான். அவ்வடி தாங்காமல் அதிர்ந்து நடுங்கிய மேரு காவலன், தன்னைப் பொறுத்தருளுமாறு வேண்டிக் கொண்டு பொருள் குவிந்து கிடக்கும் குகையைக் காட்டினான். உக்கிர குமாரன் அங்குச் சென்று, தனக்கு வேண்டும் பொருள்களை எடுத்துக் கொண்டு குகையை மூடிவிட்டு நாடு வந்து சேர்ந்தான். பின்னர் நாடு மழை பொழிய வளமுடையதாயிற்று.