உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிளையாடல் கதைகள்

16. வேதத்திற்குப் பொருள் அருளிச் செய்தது

155

பேரூழி ஒன்று ஏற்பட்டது. அப்பொழுது உலகமெல்லாமும் அழிந்தன. இறைவன் அருளாற்றலால் கதிரோன் முதலாகிய அண்டங்கள் அனைத்தையும் முன்போல் திரும்பப் படைத்தனன். படைப்பு, காப்புக்கடவுளரும் தேவரும் முனிவரும் பிறரும் தோன்றினர். இந்நிலையில் வேதத்தின் பொருளை அறிதற்குக் கண்ணுவர் முதலிய முனிவர்கள் விரும்பினர். அவர்கள் முன்னர் அரபத்தர் என்னும் முனிவர் வந்து, "வேதத்தின் மூலமாக விளங்கும் இறைவனே வேதத்தின் பொருளுரைக்க வல்லான். ஆதலின் சோமசுந்தரக் கடவுளிடம் செல்க" என்றார். அவ்வுரை கேட்ட முனிவர்கள் மதுரைக்கு வந்து வழிபட்டுத் தம் விருப்பை எடுத்துரைத்தனர்.

இறைவன் இளமையான குருவடிவில் தோன்றி கண்ணுவர் முதலிய முனிவர்களுக்கு வேதத்தின் பொருளை எடுத்துரைத்து "இப்பொருளெல்லாம் உங்களுக்கு மயக்க மில்லாமல் விளங்கு வதாக" என அருள் செய்து மறைந்தான்.

17. மாணிக்கம் விற்றது

வீரபாண்டியன் என்பான் ஒரு வேந்தன். அவனுக்குப் பட்டதரசி வழியாக மக்கட்பேறு வாய்க்கவில்லை. மற்றவர்கள் வழியாக மக்கள் பலர் பிறந்தனர். இறைவனை வேண்டி நோன்பு கொண்டான் வீரபாண்டியன். அரசி கருக்கொண்டு மகனொரு வனைப் பெற்றாள். அவன் இளையனாக இருக்கும் போதே பாண்டியன் வேட்டைக்குச் சென்று புலியால் கொல்லப்பட்டு இறந்தான்.மற்றை மக்களும் பெற்றவர்களும் அரண்மனைப் பொருள்களையெல்லாம் கவர்ந்து கொண்டனர். அவற்றுடன் மணிமுடியையும் கவர்ந்து கொண்டனர். அரசன் மகனுக்கு முடிசூட்டுவதற்குரிய நிலையில் முடியைக் காணாமல் அமைச்சர்கள் வருந்தினர். இறைவனிடம் வேண்டினர். இறைவன் ஒரு வணிகன் வடிவு கொண்டு மாணிக்கத்துடன் அமைச்சர்கள் முன் தோன்றினான்.

"வலன் என்னும் அரக்கன் தவம் செய்து சாவாவரமும் ஒரு வேளை அவன் கொல்லப்பட்டால் அவன் உறுப்புகள் மாணிக்கமாக மாறும் வரமும் பெற்றிருந்தான். அவனைக் கொல்லக் கருதிய இந்திரன் நீ வேள்விப்பசுவாக வேண்டும் என்று அவனை வேண்டிக் கொண்டு கொன்றான். உடனே அவன் உறுப்புகள் மாணிக்கமாக மாறின. அவை

வை