உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(218)

அப்பாத்துரையம் 7

அவர் நன்றி காட்டியபோது நான் வெட்கமடைந்தேன். "நான் அப்படி ஒன்றும் பெரிதாகச் செய்து விடவில்லையே; நல்ல குடும்பத்தில் இடம்பெறும் எவரும் செய்வதைத்தான் நான் செய்தேன்." என்றேன்.

ஆம். ஆனால் சரிவர முழுமனதுடனும் திறமையுடனும் நீ செய்தால் நன்மை அடைபவன் நான்; அதற்கு நன்றி காட்டுவது என் கடமை. ஆனால் என் நன்றி சொல்லளவில் நில்லாது. வாழ்நாள் முழுவதும் என் உள்ளத்தில் உனக்கு ஓர் இடமுண்டு, என்று கூறிவிட்டு அவர் விடைபெற்று அகன்றார்.