உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஜேன் அயர்

217

அவர் உடனே பரபரப்புடன் எழுந்து விளக்கேற்றப் போனார். நான் “சற்றுப் பொறுங்கள்” என்று கூறி உலர்ந்த ஆடை தேடிக் கொணர்ந்து, “இனி ஆடை மாற்றிக் கொண்டு வெளியே போய்ப் பாருங்கள்,” என்றேன்.

திரு.ராசேஸ்டர் வர நேரமாயிற்று. நான் என் அறைக்கே சென்று காத்திருந்தேன். நெடுநேரம் கழித்து அவர் வந்தார். அவர் முகம் கவலை தோய்ந்திருந்தது.

66

யாரோ ஒரு பேய்ச்சிரிப்புச் சிரித்ததாக நீ கூறினாய் அல்லவா?” என்றார்.

"ஆம்."

"இதற்கு முன் அதே சிரிப்பை எங்காவது கேட்டதுண்டா?”

"உண்டு, இங்கே வேலைசெய்யும் கிரேஸ்பூல் என்ற பெண்ணின் அறையிலிருந்து அந்தச் சிரிப்பை ஒரு தடவை கேட்டேன். அவள் மீது எனக்கு ஐயம் ஏற்பட்டதுண்டு."

அவர் முகத்தில் கவலை குறைந்தது. "ஆம், ஆம்" அவளாகத்தான் இருக்க வேண்டும். அவள் விசித்திரமானவள். அடிக்கடி அறிவு தடுமாறி எனனென்னவோ செய்து விடுகிறாள்" என்றார்.

'இதுவகையில் திருமதி ஃவேர்ஃவக்ஸிடம் கூறி ஏதாவது எச்சரிப்பு செய்யலாமா' என்றேன்.

"வேண்டா, இதில் நீ ஒன்றும் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டா. நான் வேண்டிய ஏற்பாடு செய்து கொள்கிறேன். நீ இங்கே கண்டவற்றுள் எதனையும் யாரிடமும் இப்போதைக்குச் சொல்லாதிருக்க வேண்டும் என்று தான் விரும்புகிறேன்.'

அவர் விருப்பத்துக்குக் காரணம் என்ன என்று நான் கேட்காமலே, அவர் கூறியபடி செய்வதாக ஒத்துக் கொண்டேன்.

அவர் இப்போது முதல் தடவையாக என்னை என் முழுப் பெயர் கூறி அழைத்து, "ஜேன் அயர், நீ எப்போதும் எனக்கு இடரில் உதவுகிறாய். இன்று என் உயிரையே காப்பாற்றினாய். நான் உனக்கு எவ்வளவோ கடமைப் பட்டிருக்கிறேன்.” என்று கூறி அன்பாதரவுடன் தம் கையை நீட்டினார். நான் தந்த கைக்கு அவர் முத்தமிட்டு என் முகத்தை உற்று நோக்கினார்.