உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




216) ||

அப்பாத்துரையம் 7

நான் முன்பே நினைத்தேன். அவள் பேய்ச்சிரிப்பும், இன்று நான் கண்ட காட்சியும் அதை உறுதிப்படுத்தின. அவள் என்னை என்ன செய்ய எண்ணி வந்தாளோ? என்மீது அவளுக்கு என்ன பகையோ? என்னால் அமைந்து படுக்க முடியவில்லை. திருமதி வேர்ஃவக்ஸின் அறை சென்று அவள் துணை நாடலாம் என்று எண்ணி வெளியேறினேன்.

வெளியே போனபோது நான் கண்ட காட்சி என்னைத் திடுக்கிட வைத்தது. இடைவழிகளெங்கும் புகை கம்மிக் கொண் டிருந்தது. எங்கேயோ தீ மூள்கிறது என்பதில் ஐயமில்லை. நான் என் ஆடையை முகமீது இழுத்துப் போர்த்துக் கொண்டு புகையினுள் நுழைந்தேன். புகை வரும் திசைநோக்கிச் சென்றேன். புகை திரு. ராச்செஸ்டரின் அறையிலிருந்து தான் வருகிறது என்பதைப் பார்த்ததும் என் உடல் நடுங்கிற்று. கதவு திறந்து கிடந்தது. புகையின் நடுவிலேயே திரு. ராச்செஸ்டர் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார். ஆனால், படுக்கையின் ஓரங்களி லெல்லாம் தீ கனிந்து கொண்டிருந்தது.

தீ

சிந்திக்கச் சிறிதும் நேரமில்லை. நான் உடனே ஓடோடியும் சென்று என் அறையிலிருந்த வாளிகளை எடுத்து நீர் கொண்டு வந்து அவர்மீதே கொட்டினேன். அத்துடன் ‘தீ, தீ’ எழுங்கள் என்று கூவினேன்.

அவருடைய வழக்கமான முன்கோபமும் முரட்டுத் தனமும்தான் முதலில் என்னை வரவேற்றன. "யாரது சனியன்? என்மேல் தண்ணீர்கொட்டி என்னைச் சாகடிக்கவா பார்க் கிறீர்கள்,” என்று கூக்குரலிட்டு அவர் எழுந்தார். என்னைப் பார்த்ததும் ஒன்றும் தோன்றாமல் “என்ன இது? என் மேல் ஏன் தண்ணீரைக் கொட்டித் தூக்கத்தைக் கெடுக்கிறாய்?" என்றார்.

நான் ஒன்றும் மறுமொழி கூறாமல் புகையைச் சுட்டிக் காட்டினேன். "என்ன நடந்தது? எனக்கு ஒன்றும் புரிய வில்லையே?” என்றார்.

"யாரோ உங்கள் அறையில் தீ வைத்திருக்க வேண்டும்? புகையைக் கண்டு நான் ஓடிவந்து தண்ணீர் கொட்டினேன். இனி தீ பரவாது. ஆனால் தீ வைத்தது யார் என்று விரைவில் கண்டுபிடிக்க வேண்டும்" என்றேன்.

று