ஜேன் அயர்
215
கருத்துச் செலுத்தினார். "இலண்டன் நகரை நீ பார்த்திருக் கிறாயா? அங்கே இருக்க உனக்குப் பிடிக்குமா?" என்றெல்லாம் அவர் அடிக்கடி கேட்டார். இவற்றால், தமக்குத் திருமணமான வுடன் அவர் எனக்கும் இலண்டனில் வேறு வேலை பார்த்துத் தரத்திட்டமிட்டிருக்கிறார் என்று எனக்குத் தோன்றிற்று.
என் உள்ளம் இவ்வாறு அல்லற்பட்டதனால் எனக்கு இரவு உறக்கமே பிடிக்கவில்லை. தார்ன்ஹில் இல்லத்தின் பல காட்சிகளும் பல நிகழ்ச்சிகளும் அரைத்துயிலில் என்முன் கனவாக நின்று நடமிடும். தார்ன் ஹில்லை விட்டுச்செல்ல எனக்கு உள்ளூர மனமில்லை என்பதை இது எனக்கு நன்கு விளக்கிற்று. அத்துடன் திரு. ராச்செஸ்டரைச் செல்வி பிளான்ஸி போன்ற ஒரு பட்டுப்புழுவின் பிடியில் வைத்துப் பார்க்க எனக்கு எக்காரணத்தாலும் பொறுக்க முடியவில்லை. அவள் அவருக்குத் தகுந்த - பிறர் கருதியபடி பார்த்தால் அவருக்கு மேற்பட்ட தகுதியையுடைய பெண் என்பதை நான் அறிவேன். ஆயினும், எப்படியோ எனக்கு அவள் மீது வெறுப்பும், புழுக்கமும் ஏற்பட்டன.
திரு. ராச்செஸ்டர், செல்வி பிளான்சி, தார்ன்ஹில் ஆகியவர்களைப் பற்றிய பல அரைக் கனவுகளிடையே ஒருநாள் என் கூரிய செவிகள் ஏதோ ஒரு கதவு மெல்லத் திறக்கப்படும் ஓசையையும், அடைக்கப்படும் ஓசையையும் கேட்டன. நான் இருந்த அறைக்கும் ராச்செஸ்டர் அறைக்கும் இடையே வெளியே தொலை மிகுதியாயிருந்தாலும், பின்புறம் இடையே ஒரு சுவர்தான் இருந்தது. அவர் உறக்கத்தின் மூச்சு ஒவ்வொன்றும், உருண்டு புரண்டு படுக்கும்போது படுக்கை அசையும் அசைவு ஒவ்வொன்றும் எனக்குத் தெளிவாகக் கேட்டது.
மணி ரண்டடித்தது. அச்சமயம் என் அறையின் கதவண்டை யாரோ வருவதும் கதவு திறப்பதும், எனக்குத் தெரிந்தது. நான் உரக்க, “யாரது?” என்று அதட்டினேன். உருவம் மெல்லப் பின் வாங்கிற்று. அத்துடன் அது அடங்காப் பேய்ச்சிரிப்புச்சிரித்தது. அந்தச் சிரிப்பு நான் முன் கிரேஸ்பூலின் அறையில் கேட்ட அதே சிரிப்புத்தான். கிரேஸ்பூல் எக் காரணத்தாலோ தார்ன்ஹில் இல்லத்தின் உள்ளிருந்து கொண்டே பகைமை எண்ணம் கொண்டிருக்கிறாள் என்று