உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 5

திரு. கிருட்டிண சாத்திரி இதன் முதல் இரண்டு எழுத்துக்களை விட்டுவிட்டு, ‘வாணி கனா யுள னாதன்' என்று படித்துள்ளார்.27 திரு கே.வி. சுப்பிரமணிய அய்யரும் முதல் இரண்டு எழுத்துக்களை விட்டுவிட்டு, மற்ற எழுத்துக்களை “வாணிகன் யுளநாதன்” என்று படித்துள்ளார்.28 திரு. நாராயணராவும் முதல் இரண்டு எழுத்துக்களை விட்டு விட்டுப் படிக்கிறார். அவர் இந்தத் தொடரோடு அடுத்துக் கூறப்போகிற தொடரையும் ஒன்றாக இணைத்துப் பிராகிருதமாக்கிப் பிறகு சமக்கிருதமாக்குகிறார்.

'வாணி கானா யுள நாதனா சிகட்ட-மாதன தானா' (பிராகிருதம்) நாதானாம் ஸ்ரீ கண்ட (சிகட்ட)

வணிஜரம் யூ த (-யுவ-)

மாத்ருணாம் - தானானி' (சமக்கிருதம்)

ஸ்ரீகண்ட மாத்ருகண (சிகட்ட மாத்ருகண)த்தைச் சேர்ந்த தலைமைச் சாத்து (யுலசாத்து) வாணிகத் தலைவர்களின் தானம் என்று இதற்குப் பொருள் கூறுகிறார்.29

திரு.டி.வி. மகாலிங்கம், 'கொழு வாணிகன் யுளா சாந்தன்' என்று படித்து, ‘தொழுதைலான இரும்புச் சாமான்களை விற்கிற உரை சேந்தன்' என்று பொருள் கூறுகிறார்.

30

திரு.ஐ. மகாதேவன் 'கொழு வாணிகன்' என சந்தன் என்று படித்து, இரும்பு வாணிகன் என சந்தன் என்று பொருள் கூறுகிறார்.3

31

இவர்கள் இருவரும், 'கொழு வாணிகன்...சந்தன்' என்று படித்து திருப்பது சரியே. ஆனால் இடையில் உள்ள இரண்டு எழுத்துக்களை ‘யுள' என்றும் ‘எளி' என்றும் படித்ததில் தவறு காணப்படுகிறது. இது ‘இள’ என்னுஞ் சொல்லாகும். இள என்னும் சொல் கொச்சைத் தமிழில் ‘எள’ என்று எழுதப்பட்டிருக்கிறது. இளஞ் சந்தன் என்னும் பெயருள்ள கொழு வாணிகன் மலைக்குகையில் கற்படுக்கை அமைப்பதற்கும் பொன்னைக் கொடுத்தார். அந்தப் பொன்னின் மதிப்புத் தெரியவில்லை. இதற்கு அடுத்த கல்வெட்டைப் பார்ப்போம். இதன் வரி வடிவம்

இது.