உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பாலைவனம்*

இந்த ஊருக்கு 4,5, ஆண்டுகளுக்கு முன்பு வந்திருக்கிறேன். இந்த ஊர்க் கோயிலை (கோயில் கட்டடத்தைப்) பார்ப்பதற்காகவே வந்தேன். பகலில் வந்து கோயிலை பார்த்து விட்டு உடனே திரும்பிவிட்டேன், பஸ்வசதி இல்லாத காரணத்தினால். கோயில் கட்டட அமைப்புகளில் ஏழுவிதமான விமானங்கள் சொல்லப்படுகின்றன. அந்த விமான அமைப்புகள் சிலவற்றை அப்பர் சுவாமிகளும் தமது தேவாரத்தில் கூறுகிறார். அவ்விதமான அமைப்புக்களில் ஆலக் கோயில் அல்லது யானைக் கோயில் என்பதும் ஒன்று.

ஆலக் கோயில் என்றால் ஆனைக் கோயில். ஆனைக் கோயில் கட்டடங்களைக் கஜபிருஷ்ட விமானம் என்று சிற்பசாஸ்திரங்களில் பெயர் கூறப்படுகிறது. கஜபிருஷ்ட விமானக் கோயில்களாகிய ஆனைக் கோயில் கட்டங்கள் தொண்டைநாட்டில் (தொண்டை மண்டலத்தில்) தான் அதிகமாக இருக்கின்றன. சோழ நாட்டில் சில யானைக் கோயில்கள் மட்டும் இருக்கின்றன. பாண்டி நாட்டிலும் சேர நாட்டிலும் கஜபிருஷ்ட விமானக் கோயில்கள் நானறிந்த வரையில் இல்லை. தென் கன்னட மாவட்டத்தில் சில கோயில்கள் கஜபிருஷ்ட அமைப்பாக அமைந்திருக்கின்றன.

தொண்டை மண்டலத்தில் இருக்கிற ஆனைக் கோயில் கட்டடங்கள் பலவற்றை நேரில் போய்ப் பார்த்திருக்கிறேன். ஆனைக் கோயில் கட்டடங்களில் அடிப்படையான அமைப்பில் மாறுதல் இல்லை. ஆனால், அந்தக் கட்டடங்களின் சிறப்பு அமைப்புகள் (உறுப்புகளின் அமைப்புகளில்) ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு வகையான புதுமைகள் அமைந்திருக்கின்றன. இந்த திருப்பாலை வனத்து ஆனைக் கோயிலின் அமைப்பு தனிப்பட்ட அமைப்புடன் அழகும் உடையது. மற்ற ஆனைக் கோயில்களின் அமைப்பைப் செங்கற்பட்டு மாவட்டத் தமிழ் எழுத்தாளர் சங்கம் முதலாவது மாநாட்டு மலர். ஏப்ரல், 1963.